மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் காலை வாரி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி ஏற்கனவே மூன்று போட்டிகளில் கொண்டு தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழலில் வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்திருக்கிறது. ரன் குவிப்புக்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் சென்றதால், 240 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடியும்.

இதனால், ஆரம்பம் முதலில் அதிரடியாக எதிர்கொண்ட முதல் பந்தை சிக்சர் அடித்தார். அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்தார். இந்த நிலையில் 136 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இந்திய அணி இழந்தது. இதனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். கடந்த ஆறு இன்னிங்சில் சூர்யகுமார் ஒரு முறை கூட 15 ரன்கள் தாண்டவில்லை.
இதனால் சூர்யகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்தில் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ், சொந்த ஊர் மும்பை என்பதால் பார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்த்தனர். மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு ரன்கள் ஆட்டம் இழந்தார். இது இந்திய அணிக்கு பெறும் பின்னடைவாக அமைந்தது.
இதன் மூலம் கடைசியாக விளையாடிய 8 இன்னிங்சில் மொத்தமாக சூர்யகுமார் 54 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.சராசரி ஆறு ரன்கள் அடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இப்படி ஏமாற்றி வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. கேப்டன் பொறுப்பில் சூர்யகுமார் அபாரமாக செயல்பட்டாலும், அது அவருடைய பேட்டிங்கை வெகுவாக பாதிக்க வைத்திருக்கிறது.