Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 23 வயது வீரரை ஏன் இந்திய அணியில் சேர்க்கிறீங்க? ஐபிஎலில் கூட அவர் சாதிக்கல.. ஸ்ரீகாந்த்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 நாளை புதன்கிழமை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 23 வயது வீரரான சூரியான்ஷ் செட்ஜே சேர்க்கக்கூடாது என முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சூரியான்ஷ் செட்ஜே, மொத்தமாக பேட்டிங்கில் 158 ரன்கள் அடித்திருந்தார்.

7 போட்டிகளில் களமிறங்கி சராசரியாக 39 ரன்களும் ஸ்ட்ரைக் ரேட் 175 என்ற அளவில் மிரட்டினார். ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இந்த நிலையில் தான் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூரியான்ஷ் செட்ஜே அணியில் சேர்க்கப்பட்டார்.

Suryansh Shedge

இந்த தருணத்தில் அய்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கிய அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு சூரியான்ஷ் செட்ஜே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்,
சூரியான்ஷ் செட்ஜே போன்ற வீரர்கள் எல்லாம் மீண்டும் வந்த இடத்திற்கே அனுப்பி விட வேண்டும்.

இந்தியா Vs இங்கிலாந்து டி20 தொடர் நாளை தொடக்கம்.. எந்த சேனல், ஒடிடியில் காணலாம்.. அட்டவணை, நேரம்!

இந்தியா Vs இங்கிலாந்து டி20 தொடர் நாளை தொடக்கம்.. எந்த சேனல், ஒடிடியில் காணலாம்.. அட்டவணை, நேரம்!

பந்து வீச்சில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு வீரரை எட்டாவது இடத்தில் எப்படி பேட்டிங் செய்ய அனுமதிப்பீர்கள். அவரை பிளேயிங் லெவனில் சேர்த்து இருக்கவே கூடாது. நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவரை எப்படி சேர்த்தார்கள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வேண்டுமானால் அவர் பெரிய ஆட்டங்களை ஆடி இருக்கலாம்.

ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் எந்த ஒரு அபாயகரமான ஆட்டத்தையும் ஆடியதாக எனக்கு தெரியவில்லை என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசிய சூரியான்ஷ் செட்ஜே, 25 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். பேட்டிங்களும் ஐந்து பந்துகளை எதிர் கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே அவர் சேர்த்தார்.

இதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். என்னை கேட்டால் ஆர்ஸ்தீப் சிங்கும் பெரிய அளவு சாதிக்கவில்லை. ஒருவேளை அவர் விக்கெட் எடுத்தால் அது உண்மையிலேயே அதிர்ஷ்டம் தான். ஹர்ஷித்ராணா ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டராக இருக்கின்றார். பிரின்ஸ் யாதவும் நல்ல திறமையை காட்டினார்.

IND vs ENG 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? 2 வீரர்களின் இடம் பறிப்போக வாய்ப்பு

IND vs ENG 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? 2 வீரர்களின் இடம் பறிப்போக வாய்ப்பு

இந்த மூன்று வீரர்களும் இருக்க வேண்டும் வாஷிங்டன் சுந்தர் பிளைன் லெவனில் தேவையில்லை அவருக்கு பதிலாக அக்செப்ட்டில் இருக்கிறார் கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக வருசக்கரவர்த்தியை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, June 30, 2026, 15:11 [IST]
Other articles published on Jun 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+