கோலிக்கும் ஹிட்மேனுக்கும் போட்டி.... டி20 தொடரில் உலக சாதனை படைக்கலாம்.. ரேஸில் முந்த போவது யார்?
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உலகில் இதுவரை யாரும் செய்திராத சாதனையை படைக்க விராட் கோலி காத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் டி20 தொடரில் இதுவரை யாரும் செய்திராத சாதனையை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் போட்டி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்து தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் டி20 தொடரை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

கோலி
அனைத்து வித போட்டிகளிலும் சிறந்த வீரராக உள்ள விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 2928 ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில் வரும் இங்கிலாந்து டி20 தொடரில் 72 ரன்கள் அடித்தால் சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

ஆட்டம்
இதுவரை 85 டி20 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி, 25 அரை சதங்களை விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 138.43, மற்றும் ரன் சராசரி 50.48 ஆகும். ஆனால் விராட் கோலி இதுவரை ஒரு சதம் கூட டி20 போட்டிகளில் அடித்ததில்லை. இவரின் அதிகபட்ச ஸ்கோர் 94 நாட் அவுட்டாகு. எனவே இவர் தனது முதல் சதத்தையும் இந்த டி20 போட்டியில் பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

ரோகித்
சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா 3வது இடத்தில் உள்ளார். இதுவரை 108 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 2773 ரன்களை அடித்துள்ளார். இதில் 4 சதமும், 21 அரை சதமும் அடங்கும். 2வது இடத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் உள்ளார். எனவே இந்த போட்டியில் முதலில் 3000 ரன்கள் அடிப்பது கோலியா, ரோகித் சர்மாவா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications