Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நாங்க 2 மேட்ச் தோற்றதற்கா இவ்வளவு விமர்சனம்?".. இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் சாடல்

லண்டன்: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவது குறித்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் எழுப்பியுள்ள விமர்சனங்களுக்கு, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சிதான்ஷு கோடக், "கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் ஒரு தொடரைக் கூட இழக்கவில்லை. ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையை வென்றோம். அப்போது அனைவரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். ஆனால், இப்போது வெறும் 2 போட்டிகளில் தோற்றதற்கே இவ்வளவு பேர் 'அவர்கள் தோற்கிறார்கள், தோற்கிறார்கள்' என்று பேசத் தொடங்கிவிட்டனர். இது வெறும் விளையாட்டு தான் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

IND vs ENG T20 Indian Team Batting Coach Sitanshu Kotak Hits Back at Critics Over Recent T20I Defeats

மேலும் அணியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், "இந்திய அணி தற்போது ஒரு மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கேப்டன் மாற்றப்பட்டுள்ளார், ஹர்திக் பாண்டியா அணியில் இல்லை. வரும் 2028 டி20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் வைத்து, இன்னும் இரண்டு ஆண்டுகளில் அணியை வலுப்படுத்தவே புதிய இளம் வீரர்களுக்கு நாங்கள் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறோம். இதுபோன்ற மாற்றங்களின் போது சில தோல்விகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்" என்று விளக்கமளித்தார்.

கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சவாலான பிட்ச்களில் இந்திய பேட்டிங் வரிசை தடுமாறி வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என இழந்த இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் தோற்று தற்போது 1-0 என பின்தங்கியுள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சில பலவீனங்கள் இருந்தாலும், வரும் காலங்களில் அணி முழுமையாக முன்னேற்றம் அடையும் என்று கோடக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சனை நீக்கியதற்கு ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறீங்க?” உண்மையை உடைத்த பிசிசிஐ

“இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சனை நீக்கியதற்கு ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறீங்க?” உண்மையை உடைத்த பிசிசிஐ

இன்று டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று தொடரை 1-1 எனச் சமன் செய்ய இந்திய அணி தீவிரமாகப் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 7, 2026, 10:21 [IST]
Other articles published on Jul 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+