2வது டெஸ்டிலும் ஒதுக்கப்படும் அஸ்வின்.. வேண்டுமென்றே நடக்கிறதா? கோலியின் பக்கம் உள்ள நியாயம்!
லார்ட்ஸ்: 2வது டெஸ்ட் போட்டியிலும் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற மாட்டார் எனத்தெரிகிறது.
Recommended Video
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி முதல் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டிருந்தார். அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜடேஜா முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்து, இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அசத்தல் ஃபார்ம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் என்ற விவாதம் இன்னும் ஓயாமல் நீடித்து வருகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து களத்தில் கூட அஸ்வின் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். ஆனால் விராட் கோலி அவரை ஓரம்கட்டியது சர்ச்சையை கிளப்பியது.

2வது போட்டி
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு இடம் கிடைப்பதும் சந்தேகமே. 2வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் இருந்ததை விட 2வது டெஸ்டில் அதிக புற்களை கொண்டு பிட்ச் ரெடியாகி வருகிறது. புற்கள் அதிகமாக இருந்தால், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும்.

பவுலிங் தேர்வு
எனவே 2வது டெஸ்டில் இன்னும் ஒரு சீனியர் வேகப்பந்துவீச்சாளரையும் வைத்துக்கொண்டு களமிறங்கவுள்ளது. கடந்த போட்டியில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் சிறப்பாக வீசியிருந்தனர். 2வது போட்டியில் சர்துல் தாக்கூருக்கு பதிலாக இஷாந்த் சர்மா களமிறங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே பேட்டிங்கை மனதில் வைத்தும் ஜடேஜாவுக்கே வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.

லக்ஷ்மன்
இந்நிலையில் அஸ்வின் நிச்சயம் பங்குபெற வேண்டும் என முன்னாள் வீரர் லக்ஷ்மண் அட்வைஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அஸ்வினால் இங்கிலாந்து காலநிலையில் சிறப்பாகப் பந்துவீச முடியும். கூகுலி, கேரம் பால் என திடிரென்று வித்தியாசமாக ஏதாவது முயற்சித்து பேட்ஸ்மேன்களை குழப்பக் கூடிய திறமைப்படைத்தவர்.

பேட்டிங்கிற்கு முக்கியத்துவம்
உலகின் எந்த ஒரு மைதானத்திலும், எப்படிப்பட்ட பிட்ச்-லும் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி, விக்கெட்டை எடுத்துக் கொடுப்பார். அவரை சேர்த்தால், நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்காக ஷர்துல் தாக்கூரை விராட் கோலி பெரிதும் நம்புகிறார். எனினும் அஸ்வினை களமிறக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications