IND vs ENG டெஸ்ட் - இங்கிலாந்தை அழவிட்ட இந்திய ஜோடி.. மீண்டும் அது போல் நடக்குமா?
சென்னை : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மறக்க முடியாத போட்டிகள் குறித்து தற்போது பார்க்கலாம். 1982 ஜனவரி 13. அன்றைய மெட்ராஸ் டெஸ்ட் (இன்றைய சென்னை ) பொங்கல் விடுமுறை.
ரசிகர்கள் கூட்டம் , எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில்.டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கெய்த் பிளெட்சர்,( Keith Fletcher ) இந்திய அணியினை முதலில் பேட்டிங் செய்ய கூறினார்.
ரசிகர்கள் ஆவலுடன் வந்து இருந்தனர் , சுனில் கவாஸ்கர், ஜி ஆர் விஸ்வநாத், திலிப் வெங்சர்கார் , கபில் தேவ், கிரஹம் கூச், கெய்த் பிளெட்சர், டேவிட் கோவ்ர், இயன் போத்தம், மைக் காட்டிங், டிரேக் அண்டர்வுட் , பாப் வில்லிஸ் போன்றவர் களின் ஆட்டங்களை காண.

இந்திய அணியின் பேட் டிங்கை சுனில் கவாஸ்கர், பிரணப் ராய் ஜோடி துவக்கியது.
ஸ்கார் 19 ரன்கள் இருக்கும் பொழுது, இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது.
ஒப்பனிங் பேட்ஸ்மன் பிரணப் ராய் அவுட் ஆனார். அவர் எடுத்தது 6 ரன்கள். டில்லி (Graham Dilley) வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பாப் டேய்லரிடம் ( Bob Taylor ) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து கவாஸ்கரும், வெங்சர்காரும் ஆடினார்கள். ஸ்கோர் 51 இருக்கும் பொழுது பாப் வில்லிஸ் வீசிய பந்தில் கவாஸ்கர் அவுட் ஆனார், 25 ரன் களுக்கு.
இவரது கேட்சையும் பிடித்தவர் விக்கெட் கீப்பர் பாப் டேய்லர்.கேப்டன் சுனில் கவாஸ்கர் அவுட் ஆனதும், மைதானத்தில் விளையாட வந்தவர் ஜி ஆர் விஸ்வநாத் .
இதே மைதானத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆண்டி ராபர்ட்ஸ், ஹோல்டர், ஜுலியன்,பாயிஸ் போன்றவர்களின் வேக பந்துக்களை நின்று பிரமாதமாக ஆடி 97* ( நாட் அவுட் ) இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்த ஜி ஆர் விஸ்வநாத்தின் ஆட்டத்தை காணவே எப்பொழுதும் இந்த
ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கூடுவார்கள்.
அவர் இந்த டெஸ்ட் மேட்சில் தனது அபார பேட்டிங் திறமையை வெளிப் படுத்தினார்.
இந்திய அணியின் ஸ்கோர் 150 ரன்கள் எட்டிய பொழுது, நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வெங்சர்கார் காயம் காரணமாக தொடர்ந்து ஆட முடியாமல் வெளியேறினார் அவுட் ஆகாமல்.
அப்பொழுது அவர் ரிடையார்ட் ஹர்ட் (retired hurt ) ஆனார் அவரது ஸ்கோர் 71 இருக்கும் பொழுது. 12 பவுன்டரி கள். எதிர் கொண்டது 97 பந்துகள்.இவர்கள் இருவரின் விக்கெட்டுகளை இங்கிலாந்து அணியின் சிறந்த பவுலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.வெங்சர்காருக்கு பதிலாக களத்தில் இறங்கியவர் யாஷ்பால் ஷர்மா.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் இரண்டு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 178 ரன்கள்.ஜி ஆர் விஸ்வநாத் நாட் அவுட் 64* ரன்கள்
யாஷ்பால் ஷர்மா நாட் அவுட் 5* ரன்கள்.நான்கு வேக பந்து மற்றும் ஒரு புகழ் பெற்ற ஸ்பின் பவுலர் டிரேக் அண்டர்வுட் யாராலும் , மொத்தமாக இரண்டு விக்கெட்டுக்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை.
இரண்டாம் நாள் துவக்கத்திலிருந்து இந்திய அணியின் ஆதிக்கம் ஓங்கி இருந்தது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் அவரது பவுலர்களை மாற்றி மாற்றி முயற்சித்து பார்த்தார். எதிர் பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை.இந்த ஜோடி நாள் முழுவதும் பேட்டிங் விளையாடிக் கொண்டே இருந்தனர்.
அன்றைய ஆட்ட நாள் இறுதியில் இந்திய அணியின் ஸ்கோர் 2 விக்கெடுக்கள் இழப்பிற்கு 395 ரன்களை குவித்து இருந்தனர். இருவரும் சதம் எடுத்து மேற்கொண்டுன் ரன்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.ஜி ஆர் விஸ்வநாத் 181* ரன்கள் , யாஷ்பால் ஷர்மா 102* ரன்களுடன் இருவரும் நாட் அவுட்டில் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டதித்தின் இடையே சுனில் காவாஸ்கர் இந்திய அணியின் ஆட்டத்தை
டிக்ளர் செய்து முடித்துக் கொண்டார். அப்பொழுது இந்திய அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 481.மூன்றாம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய பேட்டிங் ஜோடி ஜி ஆர் விஸ்வநாத், யாஷ் பால் ஷர்மா தொடர்ந்து ஆடி
ரன்களை குவித்தனர்.
அணியின் ஸ்கோர் 466 ல் யாஷ்பால் அவுட் ஆனார் போத்தம் பந்திற்கு. அவர் எடுத்தது 140 ரன்கள். இவரை தொடர்ந்து இரட்டை சதம் பதிவு செய்து இருந்த ஜி ஆர் விஸ்வநாத்தும் அவுட் ஆனார் , அணியின் ஸ்கோர் 481 ஐ தொட்டப் பொழுது.கவாஸ்கர் டிக் ள ர் செய்து விட்டார்.
ஜி ஆர் விஸ்வநாத்தின் ஸ்கோர் 222.விஸ்வநாத்தும், யாஷ்பால் ஷர்மாவும் தங்களது சிறப்பான பேட்டிங் திறமைகளை வெளிப் படுத்தினர்.இருவரும் ஜோடியாக சேர்ந்து 316 ரன்கள் குவித்தனர்.குறிப்பாக ஜி ஆ விஸ்வநாத் பல வகையான ஷாட்டுக் கள் அடித்து அசத்தினார்.அவரது ஸ்பெஷல் விருப்ப லேட் கட், ஸ்கொயர் கட் , கவர் டிரைவ், ஸ்ட்ரெயிட் டிரைவ், ஹூக் ஷாட், ஆன் டிரைவ் போன்றவைகள் அடங்கும்.இந்த 222 ரன்களில் 31
பவுன்டரிகள்.
374 பந்துக்களை எதிர் கொண்டார்.யாஷபால் ஷர்மா இரண்டு சிக்ஸர்களும், 18 பவுன்டரிகளும் அடித்தார்.140 ரன்களுக்கு 298 பந்துக்கள் எதிர் கொண்டார்.
இங்கிலாந்து தரப்பில் பாப் வில்லிஸ் 2 - 79, இயன் போத்தம் 1 - 83, டில்லி 1 - 87,
பால் அல்லோட் 135 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்க வில்லை.
அதே போல் ஸ்பின் பவுலர் அண்டர்வுட்டும் விக்கெட் எடுக்க வில்லை.
இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் கிரஹம் கூச் சதம் எடுத்தார்.
ரவி சாஸ்திரியின் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
181 பந்துக்கள் எதிர் கொண்டு இவர் எடுத்தது 127 ரன் கள்.
20 பவுன்டரிகள். டேவிட் கோவர் 64 மற்றும் இயன் போத்தம் 52 ரன்கள் குவித்தனர்.இங்கிலந்து அணி 328 ரன்களுக்கு ஆ ல் அவுட்.
பவுலிங்கில்
கபில் தேவ் 3 - 88
ரவி சாஸ்திரி 3 - 104
திலிப் தோஷி 4 - 69
இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களோடு டிக்ளர் செய்தனர்.பிரணப் ராய் அதிக பட்ச ஸ்கோரான 60 * நாட் அவுட், எடுத்தார்.
விக்கெட் கீப்பர் பாப் தேலர் உட்பட 10 வீரர்கள் பவுலிங் செய்தனர். பால் அல்லோட் பவுலிங் செய்யவில்லை.வில்லிஸ் மற்றும் அண்டர்வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மேட்ச் டிராவில் முடிவடைந்தது
மேட்சின் வீரராக ஜி ஆர் விஸ்வநாத் தேர்ந்து எடுக்கப்பட்டார். (Player of the Match )
இந்த டெஸ்டில் இந்திய அணியில் இரண்டு வீரர்கள் அவர்களுடைய அறிமுக முதல் டெஸ்டில் விளையாடினார்கள்.
அவர்கள்
அசோக் மல்ஹோத்ரா ( Ashok Malhotra )
பிரணப் ராய் ( Pranab Roy )
இந்த டெஸ்டில் முதல் மூன்று நாட்களுக்கு பிறகு நான்காவது நாள் ஓய்வு தினம். அதன் பின் டெஸ்ட் ஐந்தாம் மற்றும் ஆறாம் நாட்கள் தொடர்ந்து விளையாடப் பட்டது.
ஜி ஆர் விஸ்வநாத் துவக்க டெஸ்ட் இன்னிங்சில் புஜ்ஜியம் (0) இரண்டாவது இன்னிங்சில் 137 ரன்கள் எடுத்தார்.
இவர் டெஸ்ட்
மேட்சுகளில் மொத்தம் 14 சதங்கள்.
இந்த டெஸ்டில் எடுத்த 222 ரன்கள் தான் அதிக பட்ச ஸ்கோர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து , மேற்கு இந்திய தீவுகள் எதிராக தலா நான்கு சதங்கள் எடுத்துள்ளார், டெஸ்ட் கிரிக்கெட்டில்.
நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் டீம் களுக்கு எதிராக .தலா ஒரு சதமும் அடித்துள்ளார்.
இவர் டெஸ்டுக்கள் விளையாடிய மற்ற ஒரு அணியான ஸ்ரீலங்காவிற்கு எதிராக இவர் எடுத்த அதிக பட்ச ரன்கள் 9.
டெஸ்டுகளில் ஜி ஆர் விஸ்வநாத் 63 கேட்சுகள் பிடித்தவர்.
பவுலிங்கில் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இந்த தந்தை மற்றும் மகன் இருவரும் அவர்களுடைய அறிமுக ரஞ்சி கோப்பை மேட்ச்சுகளில் சதம் எடுத்தவர்கள்
இருவரும் டெஸ்டுக்களிலும் ஒப்பனிங் பேட்ஸ்மன் ஆக விளையாடியவர்கள்.
இருவரும் பெங்கால் ( Bengal ) அணிக்கு விளையாடியவர்கள்.
தந்தை பங்கஜ் ராய் (Pankaj Roy )
மகன் பிரணப் ராய்
( Pranab Roy )
பங்கஜ் ராய் 43 டெஸ்டுகளில் 5 சதங்கள் எடுத்துள்ளார்.
ஒரு விக்கெட்.எடுத்துள்ளார்
ஒரு டெஸ்டில் கேப்டனாக இருந்து ள்ளா ர்
பிரணப் ராய் விளையாடியது 2 டெஸ்டுகள்.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications