For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டியில் அறிமுகமான 2 கேப்டன்கள்.. இங்கிலாந்தின் கோட்டையில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா வரலாறு

லண்டன் : இங்கிலாந்து மண்ணில் நடைப் பெற்ற இந்த டெஸ்டில் அறிமுக இரண்டு ஆட்டக்காரர்கள் களம் இறங்கினார்கள்.இருவரும் டெஸ்ட் கேப்டன்களாகவும் திகழ்ந்தனர்.இவர்களுடன் புகழ் பெற்ற ஒரு பேட்ஸ்மேனும் உடன் ஆடினார்.

அவர்கள் சவுரவ் கங்குலி, ராகுல் ட்ராவிட். புகழ் பெற்ற பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். இந்த மேட்ச் இங்கிலாந்தின் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைப் பெற்றது 1996 ஜூன் மாதத்தில்.டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முஹம்மது அசாருதின், முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவு எடுத்தார்.

IND vs ENG Test - London Lords test - 2 Debutant became greatest player and captain

இந்திய அணியின் பவுலிங்கை கர்நாடகா ஜோடி ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் துவக்கினர். இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக் அதேற்டன், (Mike Atherton) அலெக் ஸ்டீவார்ட் (Alec Stewart ) ஓப்பனிங் செய்தனர் பேட்டிங்கை.

முதல் ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது.பவுலர் ஸ்ரீநாத். LBW அவுட் ஆனது கேப்டன்
அதேற்டன். எதிர் கொண்டது 5 பந்துகள் , ரன் எதுவும் எடுக்கவில்லை. பூஜ்ஜியம் (0)

0 - 1

நாஸ்ஸர் ஹுசைன், ஸ்டீவார்ட் ஜோடி இன்னிங்சை கட்டமைக்க தொடங்கினர்.
இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 67 ல் இரண்டாவது விக்கெட்டை இழந்தனர்.
20 ரன்கள் எடுத்து இருந்த ஸ்டீவார்ட், ஸ்ரீநாத் பவுலிங்கில் போல்ட் ஆனார்..

67 - 2

நாஸ்ஸர் ஹுசைன் , கிரஹம் தொப்ரே ஜோடி தொடர்ந்து ஆடினர். 110 பந்துகள் ஆடிய நாஸ்ஸர் ஹுசைன் 36 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ராத்தோர் கேட்ச் பிடித்தார். கங்குலி தனது துவக்க டெஸ்டில் முதல் விக்கெட்டை எடுத்தார்.

98 - 3

அடுத்த இரண்டு விக்கெட்டுக்கள் விழ, ஜாக் ரஸ்ஸல், கிரஹம் தொப்ரே கூட்டு சேர்ந்து நேர்த்தியான ஆட்டங்களை வெளிப் படுத்தினர்.

102 - 4

107 - 5

இவர்கள் இருவரும் இங்கிலாந்து டீமின் ஸ்கோரை 200 ரன்களுக்கும் மேல் எடுத்து சென்றனர்.இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் திறமையாக பந்துக்கள் வீசினார்.
உடன் ஸ்ரீநாத்தும் அவருடைய பங்கை அளித்தார்.

இருவரும் ஜோடி சேர்ந்து 136 ரன்கள் கூட்டியதும்,கிரஹம் தொப்ரே 89
ரன்களில், ஸ்ரீநாத் வீசியப் பந்தில் போல்ட் ஆனார்.

243 - 6

அடுத்த விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கிறிஸ் லெவிஸ் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிரசாத் அவர் விக்கெட்டை எடுத்தார்.

326 - 7

அந்த பக்கத்தில் ஜாக் ரஸ்ஸல் நின்று, பொறுமையுடன் ஆடி அவருடைய சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து அடுத்து இங்கிலாந்து அணி விக்கெட்டுக்களை இழந்து வந்தது.

337 - 8

343 - 9

344 - ஆல் அவுட்.

மிகவும் சிறப்பாக ஆடி வந்த ரஸ்ஸல் கடைசி பேட்ஸ்மேன் ஆக அவுட் ஆனார்.
அவரது ஸ்கோர் 124. 13 பவுன்டரிகள்எதிர் கொண்டது 261 பந்துக்கள்.
இவர் கொடுத்த கேட்சை பிடித்தது டெண்டுல்கர். பவுலர் பிரசாத்.

உபரி 38 ரன்கள் ( Extras )

இந்திய அணி பவுலிங்

ஸ்ரீநாத் 3 - 76
பிரசாத் 5 - 76
கங்குலி 2 - 49

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை விக்ரம் ரத்தோர், நயன் மோங்கியா துவக்கினர்.ரத்தோர் முதலில் அவுட் ஆனார். 15 ரன்கள் பவுலர் கார்க்.

25 - 1

அறிமுக ஆட்டக்காரர் சவுரவ் கங்குலி மைதானத்திற்குள் வந்து தனது டெஸ்ட் ஆட்டத்தை அந்த புகழ் பெற்ற லார்ட்ஸ் பிச்சில் துவங்கினார். இடது கை வீரர் தன்னுடைய பேட்டிங் திறமையை வெளி படுத்த துவங்கினார்.இவரும் மோங்கியாவும் சேர்ந்து 123 ரன்கள் வரை நகர்த்தினர்.
மோங்கியா LBW முறையில் அவுட் ஆனார்.பவுலர் லெவிஸ் 24 ரன்கள்.

59 - 2

டெண்டுல்கர் , கங்குலியுடன் சேர்ந்து விளையாட துவங்கினார்.
இருவரும் சிறப்பாக விளையாடினர்.இங்கிலாந்து பவுலர்கள் விக்கெட் எடுக்க ட்ரை செய்தனர்.இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு , இந்திய அணி 83 ரன்கள் எடுத்தது.

கங்குலி 26 * , (நாட் அவுட் ) டெண்டுல்கர் 16 * (நாட் அவுட் ).

மூன்றாம் நாள் முழுவதும் , இந்திய அணி பேட்டிங் செய்தனர்.
நாள் முடிவில் இந்திய அணி ஸ்கோர் 324 - 6 ராகுல் ட்ராவிடும், அணில் கும்ப்ளேயும் நாட் அவுட் ஆட்டக் காரர்களாக இருந்தனர். 56 , 6 ரன்கள்.

டெண்டுல்கர் 31 ரன்கள் 5 பவுண்டரிகள் 59 பந்தில்.

123 - 3

அசாருதின் 16 ரன்கள் 2 பவுண்டரிகள் 34 பந்தில்.

154 - 4

அஜய் ஜடெஜா 10 ரன் கள் 1 பவுண்டரி 55 பந்தில்.

202 - 5

சவுரவ் கங்குலி 131 ரன்கள் 20 பவுண்டரிகள் 301 பந்தில்.

296 - 6

கங்குலி மிகவும் பிரமாதமாக விளையாடி தனது முதல் சதத்தை அறிமுக டெஸ்டிலேயே பூர்த்தி செய்தார்.இவர் முல்லலி ( Alan Mullally ) வீசிய பந்தில் தன் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து ஆடிய ராகுல் ட்ராவிட், கும்ப்ளே ஜோடியில் கும்ப்ளே தனது விக்கெட்டை இழந்தார்.

351 - 7

கும்ப்ளே 14 ரன்கள் 1 பவுண்டரி 80 பந்தில்.இந்திய அணியின் பேட்டிங் தொடர்ந்தது.
ஸ்ரீநாத் அவுட் 19 ரன்கள்

388 - 8

வெகு நேர்த்தியாக ஆடி வந்த அறிமுக வீரர் ராகுல் ட்ராவிட், சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். எதிர் பார்க்காத விதமாக நெருங்கும் சமயத்தில் 95 ரன்கள் இருக்கும் பொழுது , லெவிஸ் போட்ட பந்தில் விக்கெட் கீப்பர் ரஸ்ஸல் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார்.

419 - 9

ராகுல் ட்ராவிட் 95 ரன் கள் 6 பவுண்டரிகள் 267 பந்தில்.
அறிமுக ஆட்டக்காரர்கள் கங்குலி, ட்ராவிட் இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்ததன் விளைவாக இந்திய டீம் 400 க்கும் அதிகமாக
ரன்களை குவிக்க முடிந்தது.விரைவில் ஆல் அவுட்.

429

உபரி ரன்கள் 55 இங்கிலாந்து பவுலிங்

கிறிஸ் லெவிஸ் 3 - 101
டி கார்க் 2 - 112
முல்லலி 3 - 71

இங்கிலாந்து அணியின் இரண்டாவது
இன்னிங்ஸ் ஆட்டம் துவங்கியது.

அந்த நாள் முடிவின் ஸ்கோர் 113 - 2

அலெக் ஸ்டீவார்ட் அதிக பட்ச 66 ரன்கள் எடுத்தார்.
ஆர் இராணி 41
ரன்கள்
ரஸ்ஸல் ( 38 ) ஹுசைன் ( 28 ) லெவிஸ் (26 ) மார்ட்டின் ( 23 ) மற்றவர்கள் சொற்ப்ப ரன்களில் அவுட் ஆக, இங்கிலந்து அணி
மேட்சின் முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 278
ரன்களுடன் முடித்துக் கொண்டது, அவர்கள் ஆட்டத்தை.

இந்திய அணி பவுலிங்

ஸ்ரீநாத் 2 - 76
பிரசா த் 2 - 54
கும்ப்ளே 3 - 90
கங்குலி 1 - 5

மேட்ச் டிராவில் முடிவடைந்தது.

ஜாக் ரஸ்ஸல் ஆட்ட நாயகராக (Player of the Match ) தேர்ந்து எடுக்கப் பட்டார்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, January 30, 2024, 20:49 [IST]
Other articles published on Jan 30, 2024
English summary
IND vs ENG Test - London Lords test - 2 Debutant became greatest player and captain ஒரே போட்டியில் அறிமுகமான 2 கேப்டன்கள்.. இங்கிலாந்தின் கோட்டையில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா வரலாறு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+