Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் எதற்காக ஆடினார்கள்?” தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் விளாசல்

மான்செஸ்டர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், அந்தப் போட்டிக்குப் பிந்தைய விவாதங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இடையேயான சம்பவம் குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களான டேல் ஸ்டெய்ன் மற்றும் தப்ரைஸ் ஷம்சி சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் சுந்தர் எதற்காக ஆடினார்கள்? என்பது குறித்து ஸ்டெய்ன் அதிரடியான கருத்தை கூறி உள்ளார்.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், ஆட்டம் டிராவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர்களிடம் தெரிவித்தார். ஆனால், அப்போது களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தங்களது தனிப்பட்ட சாதனையாக சதம் அடிக்க இருந்ததால், முன்னதாக டிரா செய்யும் வாய்ப்பை நிராகரித்தனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND vs ENG Test Ravindra Jadeja and Washington Sundar act reviewed by Dale Steyn and Shamsi

ஷம்சி - ஸ்டெய்ன்: சமூக வலைத்தள விவாதம்

இந்தச் சம்பவம் குறித்து தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய வீரர்கள் ஆட்டத்தை உடனடியாக டிரா செய்ய மறுத்ததற்கு ஏன் இவ்வளவு பெரிய விவாதம் நடத்துகிறீர்கள்? டிரா செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது, அவர்கள் அதை நிராகரித்தனர். அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. கடினமாக உழைத்து தங்களது சதங்களை அடித்தனர். அதன் பின் ஆட்டம் முடிந்தது" என்று பதிவிட்டிருந்தார்.

ஷம்சியின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் களமிறங்கினார். அவர் தனது பதிவில், "இந்த விவகாரத்தில் பல அடுக்குகள் உள்ளன. பேட்ஸ்மேன்கள் சதத்திற்காக விளையாடவில்லை, போட்டியை டிரா செய்வதற்காகவே விளையாடினார்கள் என்பதை மக்கள் உணரவில்லை. அதுவே (டிரா செய்வதே) அவர்களின் நோக்கமாக இருந்தது. அந்த இலக்கை அடைந்தவுடன், ஆட்டத்தின் முடிவு உறுதியான பிறகு, கைகுலுக்கி வெளியேறுவதுதான் ஜென்டில்மேன் விளையாட்டு. அந்த நேரத்தில், 'இல்லை, நாங்கள் எங்கள் மைல்கற்களை எட்ட விரும்புகிறோம்' என்று கூறுவது சற்று விசித்திரமாக இருக்கிறது. இருப்பினும், அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர்" என்று குறிப்பிட்டார்.

இந்த விவாதம் தொடர்ந்த நிலையில், ரசிகர் ஒருவர் ஸ்டெய்னின் கருத்தை "ஆங்கிலேயர்களின் கால்களை நக்குவது" போன்று உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலளித்த ஸ்டெய்ன், "அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை, இது எனது கருத்து" என்று காட்டமாக பதிலளித்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31 அன்று தொடங்கவுள்ளது. நான்காவது போட்டியில் நடந்த இந்த சர்ச்சை ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் எதிரொலிக்கும் என்பதோடு, அந்தப் போட்டி தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Story first published: Wednesday, July 30, 2025, 21:59 [IST]
Other articles published on Jul 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+