For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: ஜடேஜாவா இப்படி.. ஆடிப் போன இங்கிலாந்து.. தெறிக்கவிட்ட ஆட்டம்.. சாதனை பட்டியல்

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் அபாரமான ஆட்டம் இங்கிலாந்து அணியை மிரள வைத்தது. யாரும் எதிர்பாராத வகையில் ஏழாம் வரிசையில் இறங்கிய ஜடேஜா, 89 ரன்கள் சேர்த்து ஆறாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் கூட்டணி சேர்த்து இங்கிலாந்து அணியை திணற வைத்தார். இதை அடுத்து, அவர் இங்கிலாந்து மண்ணில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் ஜடேஜாவின் அதிரடி பார்ட்னர்ஷிப்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்த நிலையில், கே.எல். ராகுல் 2 ரன்களிலும், கருண் நாயர் 31 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் சுப்மன் கில் நிலைத்து நின்று ஆடிய நிலையில், ரிஷப் பண்ட் 25 ரன்களிலும், நிதிஷ்குமார் ரெட்டி ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த நிலையில், இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பதற்கு சுப்மன் கில்லுடன் கூட்டணி அமைத்தார் ரவீந்திர ஜடேஜா. அவர் அபாரமாக ஆடி 137 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.

மேலும், ஆறாவது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் இணைந்து 203 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அவர் இங்கிலாந்து மண்ணில் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

IND vs ENG Test Ravindra Jadeja s Edgbaston Heroics Record-Breaking Partnership and Batting Prowess

ஜடேஜாவின் இங்கிலாந்து சாதனைகள்

இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், இந்த 200 ரன் கூட்டணியும் சேர்த்து மொத்தம் இரண்டு முறை ஆறாவது விக்கெட் அல்லது அதற்கும் கீழ் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 200 ரன் கூட்டணி அமைத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் மூன்றாவது முறையாக ஆறாவது விக்கெட் அல்லது அதற்கும் கீழ் வரிசையில் 200 ரன்களுக்கும் அதிகமாக ரன் சேர்த்த இந்திய கூட்டணி என்ற சாதனையை சுப்மன் கில் மற்றும் ஜடேஜா கூட்டணி செய்தது.

இதற்கு முன் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இதே மைதானத்தில் ரிஷப் பண்ட்டுடன் இணைந்து ஜடேஜா 222 ரன்களுக்கு கூட்டணி அமைத்திருந்தார். இங்கிலாந்து மண்ணில் மற்றொரு இந்தியக் கூட்டணியும் 200 ரன்களை எடுத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் ஆறாவது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தனர்.

மேலும், இங்கிலாந்து மண்ணில் கடைசியாக விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் ரவீந்திர ஜடேஜா இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்களை எடுத்திருக்கிறார். இங்கிலாந்தில் அவரது பேட்டிங் சராசரி 31.95 என்பதாக உள்ளது. 14 போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் 767 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்து அணியில் பின்வரிசை வீரராக ரவீந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.

ஜடேஜாவின் பந்துவீச்சு இங்கிலாந்து மண்ணில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற ஒரு விமர்சனம் இருந்தாலும், அவர் ஆல்ரவுண்டராக பேட்டிங்கில் இந்திய அணிக்குக் கை கொடுத்து இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி 414 ரன்கள் 6 விக்கெட் இழந்து ஆடி வந்தது. அதன் பிறகு அபாரமாக ஆடிய சுப்மன் கில் 150 ரன்களைத் தாண்டி ரன் சேர்த்தார்.

Story first published: Thursday, July 3, 2025, 18:16 [IST]
Other articles published on Jul 3, 2025
English summary
IND vs ENG Test: Ravindra Jadeja's Edgbaston Heroics: Record-Breaking Partnership and Batting Prowess
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+