இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. கோலி இல்லாத பிளேயிங் லெவன் இப்படி தான் இருக்கும்!
மும்பை : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென்று விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்று அணியில் இருந்து விலகிவிட்டார்.
இதனால் விராட் கோலி இடத்திற்கு யார் வரப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலி இல்லாத பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.மூன்றாவது வீரராக கில் விளையாடுகிறார். விராட் கோலி இல்லாத நிலையில் நம்பர் நான்காவது வீரராக யார் களமிறங்க போகிறார் என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. பலரும் சப்ராஸ்கான் அல்லது ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
எனினும் இந்திய அணி கே எல் ராகுலை விராட் கோலி இடத்தில் களமிறக்கி விட்டு ராகுலுக்கு பதிலாக கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. அதன்படி நம்பர் நான்காவது இடத்தில் கே.எல். ராகுலும் ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் களமிறங்க போகிறார்கள்.ஆறாவது இடத்தில் ஜடேஜாவும் ஏழாவது இடத்தில் கே எஸ் பரத் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புள்ளது.
8வது இடத்தில் அக்சர் பட்டேலும், 9வது இடத்தில் அஸ்வினும், 10வது இடத்தில் முகமது சிராஜூம், 11வது இடத்தில் பும்ராவும் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இந்த அணியில் 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர் .உத்தேச பிளேயிங் லெவன் - 1,ஜெய்ஸ்வால், 2. ரோகித் சர்மா, 3. கில், 4. கே.எல். ராகுல், 5. ஸ்ரேயாஸ் ஐயர், 6.ஜடேஜா , 7. அக்சர் பட்டேல், 8.அஸ்வின், 9. கே.எஸ். பரத், 10.முகமது சிராஜ். 11. பும்ரா


Click it and Unblock the Notifications