விராட் கோலி விலகல்.. மாற்று வீரர் யார்? 4 பேருக்கு வாய்ப்பு - IND VS ENG
மும்பை : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் ஹைதராபாத்தில் தயாராகும் நிலையில் திடீரென்று முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலிக்கு மாற்று வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது. விராட் கோலி இடத்தில் யார் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ஆர்சிபி வீரர் ரஜத் பட்டிதார். இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் சதம் அடித்து அபாரமாக விளையாடி இருக்கிறார். ரஜத் பட்டிதார் வயதாகிவிட்டது என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ரஞ்சி கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் சர்பிராஸ் கான் தான். சர்பிராஸ்கான் ரஞ்சிப் போட்டியில் பல சதங்களை அடித்திருக்கிறார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் புஜாரா.
நடப்பு ரஞ்சி போட்டிகளில் புஜாரா சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்திருக்கிறார். எனினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விராட் கோலி சென்று விட்டதால் அனுபவ வீரர் ஒருவர் அணிக்கு தேவை என்பதால் புஜாராவுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிகிறது.
நான்காவது வீரராக கேஎல் ராகுலை வெறும் பேட்ஸ்மனாக விளையாட வைத்துவிட்டு விக்கெட் கீப்பருக்கு கே எஸ் பரத் அல்லது துருவ் ஜுரல் ஆகியோரை பிளேயிங் லெவனில் கொண்டு வரலாம் என்று பிசிசிஐ யோசித்து வருகிறது. இதன் மூலம் கேஎல் ராகுல் சாதாரண வீரராகவும் விக்கெட் கீப்பருக்கு கே எஸ் பரத் அல்லது துருவ் ஜூரல் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications