Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது ஏன்? தேர்வுக் குழு தலைவர் அகார்கர் விளக்கம்

மும்பை: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது மும்பையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான செய்தியாளர்களை சந்தித்த தேர்வு குழுத் தலைவர் அகார்கர், சுப்மன் கில் தலைமையிலான 18 பேர் வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தார்.
இதில் ஜெயஸ்வால், ராகுல், ரிஷப் பண்ட், கருண் நாயர் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Mohammed shami

பவுலர்கள் படையில் சிராஜ், பும்ரா, ஆர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆல் ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளராக சர்துல் தாக்கூர், நிதீஷ் குமார் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கிய இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக விளையாடிய நிலையில் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அஜித் அகார்கர், ஸ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டு தொடரிலும் அவர் அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார்.

ஆனால் தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் அவர்களுக்கு இடம் இல்லை என்று விளக்கம் அளித்தார். ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அஜித் அகார்கர், ஷமியை ஆய்வு செய்த மருத்துவக்குழு அவர் காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை என்றும் இதனால் இங்கிலாந்து தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்றும் கூறியிருந்தார்கள்.

கடந்த வாரம் அவருக்கு ஒரு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரால் தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடியாது என தெரியவந்தது. மேலும் இந்த தொடரில் பிற்பகுதியில் ஷமி உடல் தகுதி எட்ட வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அவர் முழு உடல் தகுதியை எட்டாத நிலையில் அவருக்காக காத்திருப்பது சரியான விஷயமாக இருக்காது என்று முடிவெடுத்தோம். இது உண்மையிலேயே துரதிஷ்டவசமானது. முழு உடல் தகுதியுடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரைப்போல ஒரு பவுலரை நாங்கள் நிச்சயம் தேர்வு செய்து இருப்போம் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, May 24, 2025, 14:31 [IST]
Other articles published on May 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+