IND vs ENG: விராட் கோலியின் ரெக்கார்டை உடைத்த திலக் வர்மா.. ரோகித் சர்மாவையும் பின்னுக்கு தள்ளினார்
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிகள் இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை திலக் வர்மா தட்டிச் சென்றார். 22 வயதான திலக் வர்மா, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் டி20 போட்டிகளில் அறிமுகமனார். இதுவரை இந்திய அணிக்காக 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா விராட் கோலியின் மகத்தான சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார்.

அதன்படி திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆட்டமே இழக்காமல் மொத்தமாக நான்கு இன்னிங்ஸ்களில் 318 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச அளவில் டி20 போட்டியில் ஆட்டமே இழக்காமல் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் சாதனையை திலக் வர்மா முறியடித்திருக்கிறார்.
இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மேன் 271 ரன்கள் அடித்தது முந்தைய சாதனையாக இருந்தது. இதேபோன்று தொடர்ந்து நான்கு டி20 இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு விராட் கோலி 4 இன்னிங்ஸ்களில் சேர்த்து 258 ரன்கள் அடித்தது முந்தைய சாதனையாக இருந்தது.
இதைத் தொடர்ந்து சஞ்சய் சாம்சன் 257 ரன்களும், ரோஹித் சர்மா 253 ரன்கள், ஷிகர் தவான் 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது திலக் வர்மா அதனை முறியடித்திருக்கிறார். தன்னுடைய இந்த ஆட்டத்திற்கு திலக் வர்மா பயிற்சியாளர் கம்பீருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
போட்டியின் சூழலுக்கு ஏற்ப தன்னுடைய பேட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என கம்பீர் தமக்கு அறிவுரை வழங்கியதாகவும், அதன்படியே தான் சுதந்திரமாக இன்று விளையாடியதாகவும் திலக் வர்மா கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் விராட் கோலியின் ரெக்கார்டையை திலக் வர்மா முறியடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications