Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாபெரும் உலக சாதனை.. எந்த வீரரும் தொடாத உச்சம்.. திலக் வர்மா படைத்த பிரம்மாண்ட ரெக்கார்டு

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் திலக் வர்மா இமாலய கிரிக்கெட் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். உலகிலேயே சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் திலக் வர்மா அபாரமாக ஆடி 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து இருந்தது.

IND vs ENG Tilak Varma breaks world record for most runs between two dismissals

அடுத்த இந்திய அணி அதை துரத்தியபோது வரிசையாக விக்கெட்களை இழந்து வந்தது. ஆனால், ஒரு புறம் தூணாக நின்று அதிரடி ஆட்டம் ஆடிய திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார். நான்கு ஃபோர் மற்றும் ஐந்து சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமலும் இருந்தார். இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு முன் அவர் ஆடிய மூன்று போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் ரன் சேர்த்து இருந்தார். தென்னாப்பிரிக்க டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் 107 ரன்கள் மற்றும் 120 ரன்கள் எடுத்து இருந்தார். அந்த இரண்டு போட்டிகளிலும் திலக் வர்மா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அதன் பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்டம் இழக்காமல் 19 ரன்கள் எடுத்து இருந்தார். அதனை அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்த நான்கு சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் அவர் ஆட்டம் இழக்காமல் 318 ரன்களை சேர்த்து இருக்கிறார்.

சர்வதேச டி20 போட்டிகளில் முழு உறுப்பினர் நாடுகள் மட்டும் எடுத்துக் கொண்டால் அதில் பல போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் தொடர்ந்து அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார் திலக் வர்மா. இதற்கு முன் மார்க் சாப்மேன் 271 ரன்கள் எடுத்தது மிகப்பெரிய சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை திலக் வர்மா முறியடித்து இருக்கிறார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

முழு உறுப்பினர் நாடுகளின் மத்தியில் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டு விக்கெட்களுக்கு இடையே அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியல் -

318* ரன்கள் - திலக் வர்மா (107*, 120*, 19*, 72*)
271 ரன்கள் - மார்க் சாப்மேன் (65*, 16*, 71*, 104*, 15)
240 ரன்கள் - ஆரோன் பின்ச் (68*, 172)
240 ரன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (57*, 74*, 73*, 36)
239 ரன்கள் - டேவிட் வார்னர் (100*, 60*, 57*, 2*, 20)

Story first published: Sunday, January 26, 2025, 7:26 [IST]
Other articles published on Jan 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+