Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷிக்கு டாட்டா பைபை.. மீண்டும் பிளேயிங் 11-இல் சஞ்சு சாம்சன்.. இந்திய அணி மாற்றம்

சவுதாம்ப்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

சவுதாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் டாஸ் போடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்னர் மைதானத்திற்கு வந்தடைந்த இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

IND vs ENG Vaibhav Suryavanshi dropped Sanju Samson Returns as India Opt to Bowl in 5th T20I vs England

இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், இந்த ஆட்டத்தில் 2 முக்கிய மாற்றங்களை இந்திய அணி செய்தது. குறிப்பாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்சர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக அனுபவ வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். அயர்லாந்து தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் ரன் குவிக்கத் தவறியதால் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டிருந்தார். தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அணியில் தனது இடத்தை நிலைநிறுத்திக் கொள்ள அவர் போராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு மாற்றமாக வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

IND vs ENG: டாஸ் போடும் நேரத்தில் மைதானத்திற்கு வராத இந்திய அணி.. 5வது டி20 தாமதமாக தொடக்கம்!

IND vs ENG: டாஸ் போடும் நேரத்தில் மைதானத்திற்கு வராத இந்திய அணி.. 5வது டி20 தாமதமாக தொடக்கம்!

இந்தியா பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து பிளேயிங் 11: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டங்கு.

Story first published: Saturday, July 11, 2026, 19:32 [IST]
Other articles published on Jul 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+