Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: போதும் டா சாமி! 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டு கொடுத்த வருண் சக்கரவர்த்தி மோசமான சாதனை

டி20 உலகக் கோப்பை 2026 அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 64 ரன்களை வாரி வழங்கினார். ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய அவர், இந்தப்போட்டியில் அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளரானார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் மிக மோசமான புள்ளிவிவரமாக, வருண் சக்கரவர்த்தியின் 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர், 2007 செப்டம்பர் 19 அன்று டர்பனில் இங்கிலாந்துக்கு எதிராக ஜோகிந்தர் சர்மா, நான்கு ஓவர்களில் 57 ரன்களை வாரி வழங்கியதே மோசமான சாதனையாக இருந்தது.

{image-IND vs ENG-05-2026-000797b-jpg-1772740049344_1772740050412-600x338.jpg tamil.mykhel.com}

டி20 உலகக் கோப்பை போட்டியில், வருண் சக்கரவர்த்தியின் 64 ரன்கள், வரலாற்றில் இரண்டாவது மிக அதிகபட்ச ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாக உள்ளது. இதற்கு முன்பு, 2007 செப்டம்பர் 17 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக சனத் ஜெயசூர்யா இதே 64 ரன்களை நான்கு ஓவர்களில் கொடுத்திருந்தார்.

டி20 உலகக் கோப்பையின் மிக மோசமான பந்துவீச்சுச் சாதனை அமெரிக்காவின் சௌரப் நெட்றாவல்கர் வசம் உள்ளது. அவர் 2026 பிப்ரவரி 7 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 4 ஓவர்களில் 65 ரன்களை வாரி வழங்கினார். இந்தப்பட்டியலில், வருண், சனத் ஜெயசூர்யாவுடன் இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்தியப் பந்துவீச்சாளர்களில், வருண் சக்கரவர்த்தியின் இந்த மோசமான பந்துவீச்சுக்கு அடுத்தபடியாக, அதே போட்டியில் இங்கிலாந்துக்கு அதிராக மும்பை வான்கடே மைதானத்தில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்தார். மேலும், 2024 ஜூன் 24 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அக்சர் படேல் 49 ரன்களையும், 2014 மார்ச் 23 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 48 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களில் பங்களாதேஷின் மஷ்ரஃபே மோர்டசா(63 ரன்கள் - பாகிஸ்தானுக்கு எதிராக, 2014ஆம் ஆண்டு தந்தார். ஜிம்பாப்வேயின் ரிச்சர்ட் நாகரவா 62 ரன்கள் இந்தியாவுக்கு எதிராக, நடப்பு தொடரில் வழங்கினார். இந்த வரிசையில் வருண் சக்கரவர்த்தி, சனத் ஜெயசூர்யாவுக்கு இணையாக இரண்டாம் இடத்தில் உள்ளார்.

டி20ஐ சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில், ஒரு பந்துவீச்சாளர் கொடுத்த அதிகபட்ச ரன்களின் உலக சாதனை கம்பியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மூசா ஜோபார்டே வசம் உள்ளது. அவர் 2024 அக்டோபர் நைரோபியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நான்கு ஓவர்களில் 93 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 6, 2026, 7:30 [IST]
Other articles published on Mar 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+