
பட்டியல்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 7401 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 149 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில் கோலி இன்னும் 139 ரன்கள் எடுத்தால் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்தை மிஞ்சுவார். ஸ்மித் இதுவரை 77 இன்னிங்ஸ்களில் விளையாடி 7540 ரன்கள் எடுத்துள்ளார்.

பட்டியலில் முதல் இடம்
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் ( Fab 4) பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் இடத்தில் உள்ளார். இதுவரை வெறும் 77 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 8507 ரன்கள் குவித்துள்ளார். சென்னை டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 7115 ரன்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

ஃபாப் 4 என்றால் என்ன?
fab 4 பட்டியல் என்பது ஒரே காலக்கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் வீரர்கள் அறிமுகமாகி 70 போட்டிகளுக்கும் மேலாக ஆடி நட்சத்திர வீரர்களாக இருப்பார்கள். மேலும் முக்கியமாக அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தவர்களாக இருப்பார்கள்.

கோலிக்கான லக்
2வது டெஸ்டில் கோலி அதிக ரன்கள் அடித்து ஸ்மித்தை மிஞ்சினால், அவர் சுமார் ஒரு வருடத்திற்கு பின்னடைவை சந்திக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணி அடுத்த 10 மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளை ரத்து செய்துள்ளது. நியூசிலாந்து அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை சேர்த்து 3 போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது. ஆனால் இந்தியா குறைந்தது 8 போட்டிகள் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னேற வாய்ப்பு குறைவு
அதே வேளையில் அந்த பட்டியலில் கோலி முதலிடத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக உள்ளது. ஏனெனில் முதல் இடத்தில் இருக்கும் ரூட்டின் இங்கிலாந்து அணி இந்தாண்டு இன்னும் 10 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் பட்டியலில் ரூட்டை மிஞ்ச கோலி சிறப்பாக செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications