Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நட்சத்திர நாயகனே! வரலாற்றை மாற்றி தொடர்ந்து எழுது.. சாதனைகளை உடைத்த சுப்மன் கில்லை பாராட்டிய கோலி

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மம் கில் முதல் இன்னிங்சில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கின்றார்.

இதற்கு முன்பு கவாஸ்கர் 344 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதனை கில் முறியடித்து 430 ரன்கள் குவித்து இருக்கின்றார். இதேபோன்று உலக அளவில் ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த வீரரான இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் கூச்சின் சாதனையை வெறும் 26 ரன்களில் கில் தவறவிட்டார்.

Virat Kohli

இதேபோன்று 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸ் 250 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனை கில்லுக்கு சேர்ந்திருக்கிறது. இதேபோன்று சேனா நாடுகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகியோரின் சாதனை கில் முறியடித்து தற்போது கோலி அசாருதீனுக்கு பின் மூன்றாவது இடத்தில் இருக்கின்றார்.

அதேபோன்று ஒரு தொடரில் அதிக சதம் அடித்த இந்திய அணி கேப்டன் பட்டியலில் விராட் கோலி சாதனையை கில் தற்போது சமன் செய்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் முதல் நான்கு இன்னிங்ஸில் 500 ரன்கள் மேல் குவித்த ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இப்படி பல வரலாற்றுகளை மாற்றி கில் எழுதி இருக்கிறார். இது குறித்து தற்போது முதல் முறையாக விராட் கோலி பாராட்டிருக்கின்றார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்," சிறப்பாக விளையாடி இருக்கிறாய் நட்சத்திர நாயகனே. தொடர்ந்து வரலாற்றை மாற்றி எழுது. இங்கிருந்து தொடர்ந்து மேல்நோக்கி செல். இந்த அனைத்து சாதனைகளுக்கும் தகுதியான நபர் நீ" என்று கூறி குறிப்பிட்டு இருக்கின்றார். விராட் கோலியை போல் கில் பெரிய ஆளாக வருவார் என்று பலரும் ஏற்கனவே கணித்திருந்த நிலையில் தற்போது விராட் கோலியின் வாயாலேயே கில் பாராட்டு வாங்கி இருக்கின்றார்.

Story first published: Sunday, July 6, 2025, 0:24 [IST]
Other articles published on Jul 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+