Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG- வாசிங்டன் சுந்தரா? வருண் சக்ரவர்த்தியா? பிளேயிங் லெவனில் ஒரு தமிழருக்கு தான் வாய்ப்பு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையில் இந்தியா வந்துள்ளது.

இங்கிலாந்து அணியில் பிளேயிங் லெவனில் இருக்கும் இருக்கும் 11 வீரர்களுமே நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்பதால் அவர்களை கட்டுப்படுத்தும் நெருக்கடி இந்திய பவுலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

india vs england washington sundar varun chakravarthi vs

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருந்த மெக்குல்லம் தற்போது டி20 ஒருநாள் போட்டிகளுக்கும் பயிற்சியாளராக பொறுப்பேடுத்திருக்கிறார். இதனால் இங்கிலாந்து அணி ரன் வேட்டையில் ஈடுபடும். எனினும் இங்கிலாந்து அணியில் பல வீரர்கள் முதல்முறையாக இந்தியாவுக்கு வந்து விளையாடுகிறார்கள். இதனால் இந்திய ஆடுகளங்களை எதிர்கொள்ளும் அனுபவம் அவர்களுக்கு இல்லாதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து வீரர்களுக்கு சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்க திட்டம் தீட்டியது. வாஷிங்டன் சுந்தர்,வருண் சக்கரவர்த்தி மற்றும் துணை கேப்டனான அக்சர் பட்டேல் என மூன்று வீரர்களும் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கொல்கத்தாவில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாலை நேரத்தில் பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடினால் பந்து வீச மிகவும் சிரமமாக இருக்கும். இதன் காரணமாக பேட்டிங் செய்யும் அணி சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக மூன்றாவது சுழற் பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு ஆல்ரவுண்டர் வேக பந்துவீச்சாளரை சேர்த்துக் கொள்ள அணி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. இதன் காரணமாக முதல் டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்குமா? இல்லை வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

வருண் சக்கரவர்த்தி விக்கெட்டுகளை அதிக அளவு எடுப்பதில் வல்லவர்.ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு பேட்டிங் நன்றாக தெரியும்.இதனால் இந்த இரண்டு பேரில் யாரை சேர்ப்பது என்று தெரியாமல் சூரிய குமார் முழித்து வருகிறார்.

Story first published: Wednesday, January 22, 2025, 8:51 [IST]
Other articles published on Jan 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+