Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: வாசிங்டன் சுந்தரின் பேச்சால் தான் இந்தியா தோற்றது..இங்கிலாந்து வீரர் ஜால் பட்லர் கருத்து

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணி கடைசி நாளில் 135 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்ததால் இந்திய அணியே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்போது நான்காவது நாள் இறுதியில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், இந்திய அணி ஐந்தாவது நாளில் எளிதாக வெற்றி பெற்று விடும்.

Washington sundar Jos Buttler

மதிய உணவு நேரத்திற்கு பின் வெற்றி இலக்கை தாங்கள் எட்டி விடுவோம் என்றும் கூறினார். இதுதான் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. வாஷிங்டன் சுந்தர் இப்படி பேச, இந்திய அணி போராடி தோற்றது.இதனால் பலரும் வாஷிங்டன் சுந்தரை விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள டேவிட் லயார்ட், நம் வாய் பேசக்கூடாது களத்தில் திறமை மட்டும் தான் பேச வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர் பேசுகையில், வாஷிங்டன் சுந்தரின் பேட்டியை நான் பார்த்தேன். அவர் சொன்னவுடன் உண்மையிலேயே அவர் இந்த வார்த்தையை சொன்னாரா என்று எனக்குத் தோன்றியது.

ஒருவேளை தான் சொல்ல வந்ததை வேறு மாதிரியாக சொல்லி விட்டாரா என்றும் எனக்கு தோன்றியது. எது எப்படியோ லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. வாசிங்டனின் இந்த நம்பிக்கை நிறைந்த பேச்சு இங்கிலாந்து வீரர்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள்.

அது நிச்சயம் அவர்களை கடுப்பாக்கி இருக்கும். இதனால் கண்டிப்பாக வெற்றி பெற்று தீர வேண்டும் என்ற உத்வேகத்தில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடிருப்பார்கள். தற்போது தோல்விக்கு பிறகு வாஷிங்டன் சுந்தர், நாம் ஏன் தான் அந்த வார்த்தையை சொன்னோம் என்று வருத்தப்பட்டு இருப்பார் என்று ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, July 16, 2025, 10:25 [IST]
Other articles published on Jul 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+