For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்'- ஹாரியின் சீண்டலுக்கு சுந்தர் சிக்ஸர் பதிலடி.. ரவி சாஸ்திரி பேச்சு

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியில், இந்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி ஆட்டம், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கிற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சுந்தரின் இந்த ஆட்டத்தை ஹாரி ப்ரூக்கின் பழைய சீண்டலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளது, கிரிக்கெட் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிக் கொண்டிருந்தது. அப்போது களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா, நிதானமாக ஆடி போட்டியை டிரா செய்ய முயன்றனர். அப்போது அவர்களைச் சீண்டும் வகையில் பேசிய இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக், "உங்களுக்கு சதம் அடிக்க வேண்டும் என்றால், முன்பே இப்படி வேகமாக ஆடியிருக்க வேண்டுமே?" என்று கேலியாகக் கூறினார். ஒரு டெஸ்ட் போட்டியை காப்பாற்றப் போராடும் வீரர்களைப் பார்த்து இப்படிப் பேசியது அப்போது விமர்சனத்துக்குள்ளானது.

IND vs ENG Washington Sunder s Sixes against Harry Brook s Taunt Ravi Shastri s Humorous Take on Oval Test

பதிலடி கொடுத்த வாஷிங்டன் சுந்தர்!

அந்தப் போட்டியில் சுந்தரும், ஜடேஜாவும் சதம் அடித்த பின்னரே ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். ஆனால், ஹாரி ப்ரூக்கின் அந்த வார்த்தைகளை வாஷிங்டன் சுந்தர் மறக்கவில்லை. அதை மனதில் வைத்தே ஓவல் டெஸ்டில் அவர் ஆடியதாக ரவி சாஸ்திரி கூறி இருக்கிறார்.

ஓவல் டெஸ்டின் மூன்றாவது நாளில், இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது களமிறங்கிய சுந்தர், தொடக்கத்தில் நிதானம் காட்டினார். 27 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மறுமுனையில் பிரசித் கிருஷ்ணா மட்டுமே இருந்த நிலையில், திடீரென தனது ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கஸ் அட்கின்சன் வீசிய ஓவரில் மிட்-விக்கெட் திசையில் ஒரு பிரமாண்ட சிக்ஸரை பறக்கவிட்டு தனது அதிரடியைத் தொடங்கினார்.

சிக்ஸர் மழை பொழிந்த சுந்தர்!

அடுத்ததாக ஜோஷ் டங் வீசிய ஓவரில், இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இந்தத் தொடரில் அவருக்குப் பலமுறை தொல்லை கொடுத்த ஷார்ட் பால்களையே குறிவைத்து அவர் சிக்ஸர் அடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது, ஷார்ட் பால்களில் தனது பலவீனத்தைக் கேள்விக்குள்ளாக்கியவர்களுக்கு சுந்தர் கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்பட்டது.

ரவி சாஸ்திரியின் கலகலப்பான கமெண்டரி!

அப்போது வர்ணனை செய்து கொண்டு இருந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் இயன் வார்டு, "கடந்த டெஸ்டில் ஹாரி ப்ரூக், சுந்தரை வேகமாக ஆடி சதம் அடிக்குமாறு கூறினார்" என்று இந்த பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

அதற்குப் பதிலளித்த ரவி சாஸ்திரி தனது வழக்கமான பாணியில், "சுந்தர் இப்போது, 'முதலில் என் சதத்தை நான் அடிக்கிறேன், அதன்பிறகு நான் யார் என்று உனக்குக் காட்டுகிறேன் பார்' என்று சொல்வதுபோல ஆடிக்கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

இந்த அதிரடியைத் தொடர்ந்த சுந்தர், அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி வெறும் 12 பந்துகளில் 33 ரன்களைக் குவித்தார். இறுதியில், 36 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சுந்தரின் இந்த அதிரடி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சதம், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜாவின் அரைசதங்களுடன் இணைந்து, இந்திய அணி இங்கிலாந்துக்கு 374 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயிக்க உதவியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Sunday, August 3, 2025, 12:49 [IST]
Other articles published on Aug 3, 2025
English summary
IND vs ENG: Washington Sunder's Sixes against Harry Brook's Taunt: Ravi Shastri's Humorous Take on Oval Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+