Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 5வது டெஸ்டில் பும்ராவுக்கு இடமில்லை.. வசீம் ஜாபர் தேர்வு செய்த அணியை பாருங்க

மும்பை: இந்தியா,இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் சமணில் முடிவடையும்.

இல்லை என்றால் ஐந்தாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தால் கூட இங்கிலாந்து அணி தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி விடும். இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் எந்த வீரர்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் தொடக்க வீரர் வசீம் ஜாபர் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

Ind vs Eng

அதில், தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள வசீம் ஜாபர், மூன்றாவது வீரராக சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நான்காவது வீரராக கேப்டன் கில்லும் ஐந்தாவது வீரராக ரிஷப் பண்ட்க்கு பதிலாக துருவ் ஜுரலும் களமிறங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ரிஷப் பந்த் ஐந்தாவது போட்டியில் விலகிய நிலையில் துருவ் ஜூரல் மற்றும் நாராயண ஜெகதீசன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது வீரராக ஜடேஜாவும், ஏழாவது வீரராக வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற வேண்டும் என்று வசீம் ஜாபர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று எட்டாவது வீரராக சர்துல் தாக்கூருக்கு பதில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்க்கு அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்பதாவது வீரராக முகமது சிராஜும் பத்தாவது வீரராக ஆர்ஸ்தீப் சிங்கும் இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஆர்ஸ்தீப் இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

11-வது வீரராக ஆகாஷ் தீப் விளையாட வேண்டும் என்றும் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். ஏற்கனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துகளை வீசியதால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் வசீம் ஜாஃபர் ஆகாஷ் தீப்பை சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

Story first published: Wednesday, July 30, 2025, 15:07 [IST]
Other articles published on Jul 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+