Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

89 ஆண்டுகளில்.. ஒரு வெற்றியை கூட பெறவில்லை.. தோனி அசரடித்த மைதானத்தில் சாதிக்குமா இந்தியா?

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மான்செஸ்டர் மைதானத்தில் விளையாடவுள்ளது. 89 ஆண்டுகளில் இந்திய அணி இந்த மைதானத்தில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒருமுறை கூட வென்றதே இல்லை. இதனால் இந்திய அணி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றிக்காக இந்திய அணி போராடினாலும், இறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது.

IND vs ENG what happened when India played at Old Trafford Stadium in 2014

மான்செஸ்டர் மைதானத்தை பொறுத்தவரை இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 5 டிராவுடன் இருக்கிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணி வென்றது கிடையாது. மான்செஸ்டர் மைதானத்தில் 2014ஆம் ஆண்டு இந்திய அணி ஆடிய போட்டியை ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்கவே முடியாது. குறிப்பாக தோனி ரசிகர்களின் நினைவில் என்றும் இருக்கும்.

அந்த டெஸ்ட் போட்டியில் அனுபவம் இல்லாத வீரர்களுடன் இந்திய அணியின் கேப்டன் தோனி பயணித்தார். இப்போதைய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தோனி மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரர்கள். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய், புஜாரா மற்றும் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினர்.

தொடக்கம் வீரர் கம்பீர் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் ரஹானே மற்றும் அஸ்வின் ஆகியோரை வைத்து கொண்டு தோனி மட்டும் தனியாக போராடினர். ரஹானே 24 ரன்களிலும், அஸ்வின் 40 ரன்களிலும் ஆட்டமிழக்க, தோனி 133 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 71 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் இந்திய அணி 152 ரன்கள் என்ற கவுரவமான ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

மொத்தமாக 6 வீரர்கள் டக் அவுட்டாகினார்கள். இதன்பின் இந்திய அணியின் பவுலிங்கின் போது ஸ்டூவர்ட் பிராடுக்கு இந்திய அணியின் வருண் ஆரோன் வீசிய பந்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. அதன்பின் பிராட் பேட்டிங் ஆடாவே பயந்துவிட்டார். வருண் ஆரோனின் பந்து பிராட் முக்கில் அடித்து ரத்தம் கொட்டிய நிலையில், ஓய்வறைக்கு சென்றார்.

இந்த பந்தை நினைத்து அவர் நடு ராத்தியிலும் படுக்கையில் இருந்து எழுந்து விழுந்ததாக பின்னாட்களில் கூறி இருந்தார். அந்த அளவிற்கு வருண் ஆரோன் பவுலிங் இருந்தது. அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்களை குவிக்க, இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

அப்போது இந்திய அணி வீரர்கள் நல்ல தொடக்கம் கிடைத்தும் வீணடித்தனர். இறுதியாக இந்திய அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக அஸ்வின் 46 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 1936 முதல் தற்போது வரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதே இல்லை. இதனாக் 89 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மாற்றி காட்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Saturday, July 19, 2025, 18:47 [IST]
Other articles published on Jul 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+