For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெயிட் குறைக்க பவுலிங் செய்தவர்.. இன்று இந்திய அணியின் ஸ்டார் பவுலர்.. யார் இந்த அன்சுல் கம்போஜ்?

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் அன்சுல் கம்போக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளேவுக்கு மான்செஸ்டர் மைதானத்தில் அறிமுகமாகும் முதல் இந்திய பவுலர் அன்சுல் கம்போஜ் தான். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே இடையில் ஒரு முக்கிய ஒற்றுமை உள்ளது. இவர்கள் இருவரும் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள். இவர் கிரிக்கெட் வீரராக மாறிய கதையை பார்க்கலாம்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அன்சுல் கம்போஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் 318 வீரர் என்ற பெருமையை அன்சுல் கம்போக் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 3 போட்டிகளில் விளையாடிய அவர், 2025ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியால் ரூ.3.40 கோடி கொடுத்து வாங்கப்பட்டார்.

IND vs ENG Who is Anshul Kamboj From Weight Loss Bowling to India s Test Star

அங்கிருந்து இந்திய ஏ அணிக்காக ஆடிய அவர், தற்போது இந்திய அணிக்காக அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் தற்கு முன்பாக அன்சுல் கம்போஜ் பயணித்திருப்பது அசாதாரணமான ஒரு பயணம். ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளென் மெத்ராத்தை ரோல் மாடலாக கொண்ட அன்சுல் கம்போஜ், ஹரியானா மாநிலத்தின் கர்னல் பகுதியில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள இன்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்.

விவசாயியான இவரின் தந்தை உத்தம் சிங், ஒருமுறை அன்சுல் கம்போஜ் டென்னிஸ் பந்தில் தன் வயது சிறுவர்களுடன் தெருக்களில் விளையாடி இருக்கிறார். சிறு வயதில் அதிக எடையுடன் அன்சுல் கம்போஜ் இருந்ததால், அவரின் தந்தை ஒரு முடிவு எடுத்துள்ளார். அன்சுல் கம்போஜின் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், அவரை கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்புவதுதான் ஒரு வழி என்று நினைத்திருக்கிறார்.

இதனால் 40 நிமிட தூரம் பயணித்து கிரிக்கெட் அகாடமியில் 11 வயதில் அன்சுல் கம்போஜை சேர்த்திருக்கிறார். முதல் நாளில் அதிக எடையுடன் இருந்த கம்போஜை பார்த்த பயிற்சியாளர் சதீஷ் ராணா, பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் அன்சுல் கம்போக் பயிற்சி தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக அகாடமிக்கு வருவதைக் கவனித்துள்ளார்.

உத்தம் சிங்கை பொறுத்தவரைத் தனது மகனின் உடல் எடை குறைய வேண்டும் என்பதுதான் நோக்கம். இதனால் அன்சுல் கம்போஜை அதிகமாக பவுலிங் செய்ய வைக்குமாறு பயிற்சியாளரிடம் கூறி இருக்கிறார். ஆனால் நாளாக நாளாக அன்சுல் கம்போஜின் பவுலிங் விரைவாக உச்சத்தை எட்டியிருக்கிறது. இதனால் யு14 மாவட்ட அளவிலான அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

அதன்பின் ஹரியானாவின் யு19 அணிக்கான வடக்கு மண்டல அணியிலும் இடம்பிடித்துள்ளார். மெக்ராத்தின் பவுலிங் அன்சுல் கம்போஜின் மனதில் ஏற்படுத்திய தாக்கம்தான், அவர் ஒரே லைன் மற்றும் லெந்தில் தொடர்ச்சியாக வீச காரணமாக மாறியது. ஒரு கட்டத்தில் யு19 இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் யு19 உலகக்கோப்பைக்கு முன்பாக காயம் அடைந்தார்.

இதனால் கிரிக்கெட்டில் இருந்தே விலக முடிவு எடுத்த அவரை, தந்தை உத்தம் சிங் ஆறுதல் கூறி நம்பிக்கை அளித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக பவுலிங் செய்த அவருக்கு 22 வயதிலேயே ரஞ்சி டிராபி விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து 2023 விஜய் ஹசாரே தொடரை ஹரியானா அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

ஆனால் அதனை விடவும் ரஞ்சி டிராபியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அன்சுல் கம்போஜிற்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அன்சுல் கம்போஜ் பவுலிங் குறித்து தோனி கூறுகையில், அன்சுல் கம்போஜின் பந்துகள் வேகத்தைக் கணக்கிடும் இயந்திரம் காட்டுவதை விடக் கூடுதல் வேகத்துடன் வந்து கிளஸில் அடிக்கிறது. அதனால் அன்சுல் கம்போஜிடம் எச்சரிக்கை இருக்க வேண்டும் என்றார்.

சாதாரணமாக உடல் எடையைக் குறைப்பதற்காக கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச் சென்ற தந்தை உத்தம் சிங்கிற்கு, இன்று வரை அன்சுல் கம்போஜ் செய்யும் அனைத்தும் ஆச்சரியம் தான். இந்தியா ஏ அணிக்காக ஆடிவிட்டு சொந்த ஊருக்கு வருவார் என்று எதிர்பார்த்த போது, நேராகப் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் சொந்த ஊர் சென்ற போது, இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதனால் அன்சுல் கம்போஜின் குடும்பமே உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறது.

Story first published: Wednesday, July 23, 2025, 16:46 [IST]
Other articles published on Jul 23, 2025
English summary
Anshul Kamboj debuts for India in the 4th Test against England at Manchester, becoming the first Indian bowler after Anil Kumble to debut at this venue. Both share the rare feat of taking 10 wickets in an innings in domestic cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+