Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சென்னையில் என்னால் ஆட முடியாது.." இந்திய அணிக்கு வலைவிரித்த இங்கிலாந்து.. மிகப்பெரிய சூட்சமம்!

சென்னை: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் ஏன் ஆட மாட்டார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த வெறியில் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்தியா

இந்தியா

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் 4 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பெஸ், ஜிம்மி ஆண்டர்சன் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இதற்கு பதிலாக இங்கிலாந்து அணியில் பென் போக்ஸ், ஸ்டூவர்ட் போர்ட், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் ஏன் ஆட மாட்டார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

 ஒரு பக்கம் காயம்

ஒரு பக்கம் காயம்

அதன்படி அவருக்கு ஒரு பக்கம் காயம் இருக்கிறது. இந்த காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஆட கூடிய நிலையில் இருந்தாலும் காயத்தை காரணம் காட்டி ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

குழப்பம்

குழப்பம்

இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரில் இவர் பிட்டாக இருக்க வேண்டும். இதனால் டெஸ்ட் போட்டிக்கு இடையில் அடிக்கடி ஓய்வு கொடுக்கவும். இவர் காயம் அடையாமல் இருக்கவும் வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

சென்னை

சென்னை

இன்னொரு பக்கம் சென்னை பிட்சில் இவருக்கு ஆட விருப்பம் இல்லை. சென்னை பிட்ச் இவரின் பவுலிங் ஸ்டைலுக்கு ஏற்றபடி இல்லை. இவர் சென்னை பிட்ச் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகாத காரணத்தால் அதிகம் சிரமப்பட்டார். சென்னை வெயிலும் இவருக்கு எதிராக இருந்தது .

 விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

இந்த நிலையில் சென்னை பிட்சில் இதற்கு முன் நன்றாக பந்து வீசி அனுபவம் கொண்ட போர்டை இங்கிலாந்து அணி உள்ளே கொண்டு வந்து இருக்கிறது .அதேபோல் கிறிஸ் வோக்ஸ் சென்னை பிட்சில் நன்றாக பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு சென்னை பிட்ச் கண்டிப்பாக அதிக சவாலாக இருக்க போகிறது என்கிறார்கள்.

Story first published: Friday, February 12, 2021, 23:10 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+