இந்த 31 வயது வீரரை ஏன் அணியில் சேர்க்கல.. அது ஆர்ச்சரை இங்கிலாந்து நீக்குவதற்கு சமம்.. மொயீன் அலி
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது குறித்து இங்கிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆச்சரியம் தெரிவித்துள்ளார். பந்துவீச்சு துறையில் இந்திய அணிக்கு பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், 31 வயதான குல்தீப்பிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் கூட, இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது, மேலும் அக்சர் படேல் மட்டுமே ஒரே சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டார். 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 27.04 சராசரியிலும், 5.07 எகானமியிலும் கிட்டத்தட்ட 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப், இந்தியாவின் மிகச்சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.

இது குறித்து பேசிய அவர், "குல்தீப் யாதவ் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இந்திய அணிக்கு அவர் இங்கிலாந்தின் அடில் ரஷீத் போன்றவர். அவர் கூட்டணிகளை உடைத்து விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய விக்கெட் டேக்கர், அவரது பந்துவீச்சை கணிப்பது எளிதல்ல. அவர் கட்டாயம் விளையாட வேண்டும்,
ஆனால் இந்திய அணி தனது பேட்டிங் வரிசையை நீட்டிக்க விரும்புகிறது. அவர்களின் பெரும்பாலான பந்துவீச்சாளர்களால் பேட்டிங் செய்ய முடியாது என்பதே அவர்களின் முக்கியப் பிரச்சினையாக உள்ளது" என்றார்.
"பும்ரா இல்லாத இந்திய பந்துவீச்சு மிகவும் சாதாரணமாகவே தெரிகிறது. ஆடுகளம் சாதகமாக இருந்தால் மட்டுமே அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால், பிளாட் விக்கெட்டுகளாக இருந்தால் இந்திய அணி பந்துவீச்சில் கடுமையாக தடுமாறும்," என்று அவர் கூறினார்.
"கடைசி போட்டியில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு. அவர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு, ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் வல்லவர். அவர் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் உதவுகிறார். அவர் இல்லாதது இங்கிலாந்து அணியில் இருந்து அடில் ரஷீத் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரையும் நீக்குவதற்கு சமம்," என்று மொயீன் அலி மேலும் தெரிவித்தார். பும்ரா முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும், அவரது எகானமி ரேட் நான்காக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

