For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: கடைசி நாளில் பேட்டிங் செய்ய வருவாரா ரிஷப் பண்ட்? பிசிசிஐ தந்த அப்டேட்

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்ப்பதற்காகவும், போட்டியை டிரா செய்வதற்காகவும் கடுமையாக போராடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒன்று வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் சமன் செய்ய வேண்டும். இப்படி நெருக்கடியான கட்டத்தில் இந்தியா இந்த டெஸ்டில் விளையாடுகிறது.

Rishabh Pant

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களில் ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து அசத்தி இருக்கின்றது. இதன் மூலம் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாம் நாளில் விளையாடுகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே ஜெயஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் விக்கெட்டை அடுத்தடுத்து இந்தியா இழந்தது 0 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் உடன் இந்தியா தடுமாறியது.

அப்போது கேப்டன் கில் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதன் மூலம் நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் கடைசி நாளில் இந்திய அணி 132 ரன்கள் உடன் பின்தங்கி இருக்கின்றது. இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என்றால் இங்கிலாந்தை விட குறைந்தபட்சம் 200 ரன்கள் கூடுதலாக அடிக்க வேண்டும்.

மேலும் தேநீர் இடைவேளை வரை இந்தியா பேட்டிங் செய்ய வேண்டும். இந்த தருணத்தில் இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இப்படி இக்கட்டான ஒரு சூழ்நிலையில், அவர் பேட்டிங் செய்ய வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

இது குறித்து தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோடாக், அளித்துள்ள விளக்கத்தில் ரிஷப் பன்ட் கண்டிப்பாக ஐந்தாவது நாள் பேட்டிங் செய்ய வருவார் என்று கூறியுள்ளார். இந்திய அணி இந்தப் போட்டியை டிரா செய்ய வேண்டும் என்றால் பண்ட் பேட்டிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் தற்போது பண்ட் பேட்டிங் செய்ய வருவார் என்று பேட்டிங் பயிற்சியாளர் கோட்டாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கின்றது.

Story first published: Sunday, July 27, 2025, 6:40 [IST]
Other articles published on Jul 27, 2025
English summary
Ind vs Eng- Will Rishabh Pant comes to Bat at Day 5 in Manchester Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+