Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ஆஸ்திரேலியா செய்த உதவி.. நம்பர் 1 இடத்தை பிடித்த இந்தியா

மும்பை : 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்திய அணி. முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருந்தது.

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. அதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி சரிவை சந்தித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி 64.58 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

IND vs ENG World Test Championship 2023 - 2025 India move to number 1 spot as NZ defeated


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் தற்போது ஒன்பது அணிகள் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப் பட்டியல் வரிசைப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்திய அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகள், 2 தோல்விகள், 1 டிரா பெற்று 64.58 வெற்றி சதவீதம் கொண்டு முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகள், 2 தோல்விகள் பெற்று 60 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 11 போட்டிகளில் 7 வெற்றிகள், 3 தோல்விகள், 1 டிரா உடன் 59.09 வெற்றி சதவீதம் கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் 2023 - 2025 -

இந்தியா - 64.58
நியூசிலாந்து - 60
ஆஸ்திரேலியா - 59.09
வங்கதேசம் - 50
பாகிஸ்தான் - 36.66
வெஸ்ட் இண்டீஸ் - 33.33
தென்னாப்பிரிக்கா - 25
இங்கிலாந்து - 19.44
இலங்கை - 0

Story first published: Sunday, March 3, 2024, 9:44 [IST]
Other articles published on Mar 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+