Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: கவாஸ்கர் கூட செய்யாத சாதனை.. தெறிக்கவிட்ட ஜெய்ஸ்வால் 5வது சதம்.. இந்தியா ரன்குவிப்பு

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஐந்தாவது சதத்தை அவர் பூர்த்தி செய்து இருக்கிறார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளில் முதல் செஷனில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என இங்கிலாந்து அணி எண்ணியது. ஏனென்றால் கடைசியாக இங்கு நடைபெற்ற ஆறு டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்து வீசிய அணியே வெற்றி பெற்றது.

Yashasvi Jaiswal

இதன் காரணமாக இங்கிலாந்து அணி வீரர்கள் இந்தியாவின் பேட்டிங்கை உடைக்கும் நோக்கில் களமிறங்கினர். ஆனால் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் சேர்ந்து அபாரமாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 91 ரன்கள் எடுத்தது. ராகுல் 42 ரன்களில் ஆட்டம் இழக்க, பவுண்டரிகளை விரட்டிய ஜெய்ஸ்வால் 96 பந்துகளின் அரை சதம் அடித்தார்.

ஒரு கட்டத்தில் பந்து ஸ்விங் ஆனது நின்றது. இதனால் ஜெய்ஸ்வால் தன்னுடைய ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார். பவுண்டரிகளை அடுத்தடுத்து விரட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஜெயிஸ்வாலுக்கு கையில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் ஜெய்ஸ்வால் அவதிப்பட்டார். எனினும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு ஜெய்ஸ்வால் தொடர்ந்து விளையாடினார்.

அதிரடி காட்டிய ஜெய்ஸ்வான் 144 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 16 பவுண்டரிகளும்,ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் தன்னுடைய ஐந்தாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அது மட்டும் இல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் லீட்ஸ் மைதானத்தில் சதம் விளாசிய முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார்.

கவாஸ்கர் கூட தொடக்கவீராக களம் இறங்கி லீட்ஸ் டெஸ்டில் சதம் அடித்தது கிடையாது. ஆனால் ஜெய்ஸ்வால் அத்தகைய சாதனையை பூர்த்தி செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 24 வயது ஆவதற்கு முன்பே வெளிநாட்டு மண்ணில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

சச்சின் ஏழு சதம் கவாஸ்கர் நான்கு சதம் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் 3 சதம் அடித்துள்ளார். இதேபோன்று 23 வயது ஆவதற்குள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இரண்டாம் இடத்தில் பிடித்திருக்கிறார். சச்சின் 11 சதம் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் ரவி சாஸ்திரி மற்றும் திலிப் வெங்சர்க்கார் ஐந்து சதங்கள் அடித்துள்ளனர்.

Story first published: Friday, June 20, 2025, 20:30 [IST]
Other articles published on Jun 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+