For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

147 வருட வரலாற்றில் முதல்முறை.. ஹாட்ரிக் சிக்ஸால் மிரண்ட ஆண்டர்சன்.. ஜெய்ஸ்வால் படைத்த சாதனை!

ராஜ்கோட் : 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் தொடரில் 20 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெளுத்து கட்டி வருகிறது. இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களுடன் 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 91 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் - சர்பராஸ் கான் கூட்டணி இணைந்தது.

IND vs ENG : Yashasvi Jaiswal becomes the First Indian Player to hit 10 sixes in an innings in a Test History

3ஆம் நாள் ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்திருந்த போது முதுகு பிடிப்பு காரணமாக ஜெய்ஸ்வால் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி பாதியில் விலகினர். இந்த நிலையில் இன்று மீண்டும் பேட்டிங்கை தொடங்கிய போது, அதே அதிரடியை தொடர்ந்து வெளிப்படுத்தினார். உணவு இடைவேளையின் போது 149 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதன்பின் ஆண்டர்சன் பந்தில் ஒரு ரன் சேர்த்து 150 ரன்களை எட்டினார்.

இதன்பின் ஆண்டர்சன் வீசிய அடுத்த ஓவரில் 6,6,6 என்று ஹாட்ரிக் சிக்ஸ் விளாச, ஒரு நிமிடம் களத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆண்டர்சனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் மூலம் ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸில் மட்டும் 10 சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 92 ஆண்டு கால இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் ஒரே இன்னிங்ஸில் 10 சிக்சர்களை அடித்ததில்லை.

1994ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான நவ்ஜோத் சிங் சித்து 8 சிக்சர்களையும், மயங்க் அகர்வால் வங்கதேச அணிக்கு எதிராக 8 சிக்சர்களை அடித்ததே சாதனையாக இருந்தது. வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஜெய்ஸ்வால், 92 ஆண்டுகள் வரலாற்றை மாற்றியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் 500 ரன்களை கடந்துள்ளார்.

இதன் மூலம் சவுரவ் கங்குலிக்கு பின் ஒரே டெஸ்ட் தொடரில் 500 ரன்களை விளாசிய 2வது இந்திய இடதுகை பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கங்குலி 534 ரன்களை விளாசினார். அந்த சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் எளிதாக முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதன் மூலம் 2019 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 19 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, February 18, 2024, 12:45 [IST]
Other articles published on Feb 18, 2024
English summary
IND vs ENG : Yashasvi Jaiswal becomes the First Indian Player to hit 10 sixes in an innings in a Test History
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+