Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: என்ன பண்ணிட்டீங்க ஜெய்ஸ்வால்.. மேட்சே போயிடுச்சு.. நீங்க ஊருக்கு கிளம்புங்க

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் முக்கியமான கேட்ச் ஒன்றை தவற விட்டு இருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மேலும் 350 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது.

இந்திய அணி 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணி வழக்கம்போல் பந்துவீச்சில் சோபிக்கவில்லை.

Yashasvi Jaiswal

இந்திய அணியின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் பெண் டக்கட் சுக்குநூறாக உடைத்தார். ஏதோ ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அவர் ரன்களை சேர்க்க இந்திய அணிக்கு தோல்வி உறுதியானது. இதனால் பென் டக்கட் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடி இந்தியாவுக்கு ஏற்பட்டது.

இந்த சூழலில் முஹம்மது சிராஜ் வீசிய பந்தில் 98 ரன்கள் எடுத்திருந்த போது பென் டக்கட் ஒரு புல் ஷாட்டை ஆடினார். அப்போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ஜெய்ஸ்வால் பந்தை பிடிப்பதற்காக ஓடி வந்தார். ஆனால் கேட்சை அவர் மீண்டும் தவறவிட்டார். இந்த போட்டியிலே அவர் மூன்று கேட்ச்களை தவறவிட்டு இருக்கின்றார். இந்த கேட்சை மட்டும் ஜெய்ஸ்வால் பிடித்திருந்தால் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்திருக்கும்.

ஆனால் ஜெய்ஸ்வாலின் இந்த ஒரு தவறால் இந்திய அணி போட்டியை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெய்ஸ்வால் சதம் அடித்த நிலையில் பில்டிங்கில் மிகவும் மோசமாக அவர் செயல்படுகிறார். இதன் காரணமாக ஜெயிஸ்வாலை அணியை விட்டு நீக்கி ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் ஜெய்ஸ்வால் கேட்ச் விட்டதால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த கம்பீரும் கடுப்பானார்.ஜெயஸ்வால் கேட்ச் கோட்டை விட்டதால் பென் டக்கட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்

Story first published: Tuesday, June 24, 2025, 20:24 [IST]
Other articles published on Jun 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+