Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் செய்ததை வேறு எந்த கேப்டன் செய்து இருக்கிறார்?.. யுவராஜ் சிங் கேள்வி.. விமர்சனங்களுக்கு பதிலடி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விமர்சிக்கப்பட்டு மட்டும் வரும் நிலையில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார். அதே சமயம், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஆதரவாகவும் அவர் பேசி இருக்கிறார்.

சமீபத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 3 எனவும் இழந்து இருந்தது.

IND vs ENG Yuvraj Singh supports Rohit Sharma and Gautam Gambhir

ரோஹித் சர்மா சரியாக ரன் சேர்க்காததால் அவர் இந்திய அணியில் இருந்து விலக வேண்டும் எனவும் ஓய்வு பெற வேண்டும் எனவும் பலரும் பேசி வருகின்றனர். அதேபோல பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வந்ததிலிருந்து தான் இந்திய அணி தோல்விகளை சந்தித்து வருகிறது என்ற விமர்சனமும் உள்ளது.

அது பற்றி பேசிய யுவராஜ் சிங் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தாமாகவே முன் வந்து போட்டியில் இருந்து விலகி இருந்ததை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

"நான் எப்போதுமே மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்திய அணி என்ன செய்துள்ளது என்பதைத்தான் பார்ப்பேன். கவுதம் இப்போதுதான் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். அவருக்கு மேலும் சிறிது காலம் வேண்டும். ரோஹித் சர்மா இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன். இந்திய அணியை ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன்."

"அவர் ஆஸ்திரேலியாவில் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தாமாகவே விலகினார். வேறு ஒருவருக்கு தனது இடத்தை அளித்தார். எத்தனை கிரிக்கெட் கேப்டன்கள் இது போன்ற செயல்களை இதற்கு முன் செய்து இருக்கிறார்கள்? தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்." என்று யுவராஜ் சிங் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் வீரர் நிதிஷ்குமார் ரெட்டியை பாராட்டி பேசினார் யுவராஜ் சிங் நிதீஷ் குமார் தனது முதல் தொடரிலேயே சதம் அடித்திருக்கிறார் அது மிகவும் சிறப்பானது பலரால் அதை செய்ய முடியாமல் போனது ஜெய் ஸ்வால் தனது முதல் ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடின் 150 ரன்கள் அதிகமாக சேர்த்தார் அது மிகவும் பாராட்டத்தக்கது இந்த செயல்பாடுகளைப் பற்றி தான் நாம் அதிகம் பேச வேண்டும் என்றார்.

மேலும் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஜெய்ஸ்வால் பற்றி தான் நாம் பேச வேண்டும் எனவும் யுவராஜ் சிங் கூறி உள்ளார். "நிதிஷ் குமார் தனது முதல் தொடரிலேயே சதம் அடித்து இருக்கிறார். அது மிகவும் சிறப்பானது. பலரால் அதை செய்ய முடியாமல் போனது. ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக ஆடிய டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் சேர்த்தார். அது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த செயல்பாடுகளைப் பற்றி தான் நாம் அதிகம் பேச வேண்டும்" என்றார் யுவராஜ் சிங்.

Story first published: Friday, January 17, 2025, 8:54 [IST]
Other articles published on Jan 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+