Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs IRE: இந்திய அணியில் 2 பேர் அறிமுகம்.. வைபவ் சூர்யவன்ஷி இன்று விளையாடுகிறாரா? ஸ்ரேயாஸ் பதில்

பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலாவது பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். கடந்த போட்டியில் இந்திய அணி சந்தித்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீண்டு, தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இன்று களம் இறங்குகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு இளம் வீரர்களான சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த சூர்யான்ஷ் ஷெட்ஜிற்கு சஞ்சு சாம்சன் அறிமுகத் தொப்பியை வழங்கினார். ஆல்-ரவுண்டரான பிரின்ஸ் யாதவிற்கு சிவம் தூபே தனது தொப்பியை வழங்கி வாழ்த்தினார்.

Captain Shreyas Iyer at the toss India vs Ireland T20

அயர்லாந்து படைக்கு வரலாற்று வாய்ப்பு

அதேவேளையில், கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அறிமுகப் போட்டிக்காக மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.டாஸ் வென்ற பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தாங்கள் முதலில் பந்து வீச போவதாக தெரிவித்துள்ளார். வானிலை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மழை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெயலாம் என்பதால் சூழலை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள தாங்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.

IND Vs IRE: ஒரு ஓவர் வீசவா இந்த 26 வயது வீரரை அணியில் வச்சிருக்கீங்க? - அஸ்வின் கேள்வி

IND Vs IRE: ஒரு ஓவர் வீசவா இந்த 26 வயது வீரரை அணியில் வச்சிருக்கீங்க? - அஸ்வின் கேள்வி

கள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வீரர்கள் விளையாட வேண்டும் என்றும் ஸ்ரேயாஸ் அறிவுறுத்தினார். அயர்லாந்து அணி முதல் டி20 போட்டியில் சிறப்பான முறையில் பந்து வீசி நெருக்கடி கொடுத்ததாகவும், எங்கள் அணி வீரர்கள் அறிவுக்கூர்மையுடன் உள்ளுணர்வை பயன்படுத்தி விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

யார் இன்று விளையாடவில்லை?

ஐபிஎல் தொடரை விட சர்வதேச போட்டிகள் முற்றிலும் வித்தியாசமானது என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரேயாஸ் இன்று அணியில் சூரியான்ஸ் செட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அணி அறிமுகம் ஆவதாக கூறியுள்ளார். சூரியான்ஸ் அதிரடி வீரராகவும் அபாயகரமான பவுலராகவும் இருக்கிறார். இதேபோன்று பிரின்ஸ் யாதவுக்கு இது முதல் போட்டி என்பதால் அவரை கடும் அழுத்தத்தில் தம் ஆளாக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரதிஷ் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து பேசிய அயர்லாந்து அணி கேப்டன் லார்கன் டக்கர், தாங்கள் முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து அதன் பின் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். அயர்லாந்து அணியில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தொடரின் முதலாவது போட்டியில் அயர்லாந்து அணி, சிறப்பான ஆல்-ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், நடப்பு டி20 உலக சாம்பியனான இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் வடிவத்திலும் தங்களது முதல் வெற்றியை அயர்லாந்து பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது. தற்போது 1-0 என முன்னிலையில் உள்ள அயர்லாந்து, இன்றைய போட்டியிலும் வென்று இந்திய அணிக்கு எதிராக தங்களது முதல் டி20 தொடர் வெற்றியைப் பெற தீவிரமாக உள்ளது.

IND vs IRE: அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு.. இன்னும் 2 அடித்தால் போதும்!

IND vs IRE: அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு.. இன்னும் 2 அடித்தால் போதும்!

முந்தைய போட்டியில் சொதப்பிய இந்தியா

முதலாவது போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் உத்திகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. பவர்பிளே ஓவர்களில் அயர்லாந்து அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும், கேப்டன் லோர்கன் டக்கர் மற்றும் கரேத் டெலானி ஜோடியின் சிறப்பான பேட்டிங்கால் அந்த அணி 182 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பீல்டிங்கில் மூன்று முக்கிய கேட்ச்சுகள் நழுவ விடப்பட்டன. மேலும், டெத் ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா 57 ரன்களை விட்டுக் கொடுத்து ரன் குவிப்பைத் தடுக்கத் தவறினார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 16வது ஓவரில் 19 ரன்கள் கசிந்தன. இந்த பலவீனங்களை சரிசெய்து இந்திய அணி இன்று மீண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, June 28, 2026, 17:43 [IST]
Other articles published on Jun 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+