IND vs IRE: அதிரடி காட்டிய அயர்லாந்து! விக்கெட் வேட்டை நடத்திய பிரின்ஸ்,சிவம் துபே..இந்தியா ஆதிக்கம்
பெல்ஃபாஸ்ட்: இந்தியா, அயர்லாந்து இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆட்டம் நிறுத்தப்படும் போது முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சூரியன்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகிய இரு இளம் வீரர்கள் இன்றைய போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர்.

தொடக்கத்திலேயே சரிந்த அயர்லாந்து விக்கெட்டுகள்
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்களை விளாசி அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. எனினும், இந்திய பந்துவீச்சாளர்கள் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அயர்லாந்தின் தொடக்க வீரர்களான டிம் டெக்டர் மற்றும் ராஸ் அடேர் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அதிர்ச்சியளித்தனர். இதனால் அயர்லாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.
இதனைத் தொடர்ந்து ஹாரி டெக்டர் மற்றும் லோர்கன் டக்கர் ஜோடி அணியை மீட்க போராடியது. அப்போது அறிமுக பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ், லோர்கன் டக்கரை வீழ்த்தி சர்வதேச டி20 அரங்கில் தனது முதல் விக்கெட்டைப் பதிவு செய்தார். பின்னர் களமிறங்கிய பென் காலிட்ஸ், ஹாரி டெக்டருடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அயர்லாந்து அணியை மீட்டெடுத்த பென் காலிட்ஸ் 30 ரன்கள் எடுத்திருந்த போது ஷிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய ஷிவம் துபே
அபாரமாக பந்துவீசிய ஷிவம் துபே ஒரே ஓவரில் அயர்லாந்து அணிக்கு இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் காலிட்ஸை திலக் வர்மாவின் சிறந்த கேட்ச் மூலம் வெளியேற்றிய துபே, அதற்கு அடுத்த பந்திலேயே கரேத் டெலானியை போல்டாக்கி கோல்டன் டக் அவுட் செய்தார். இதன் மூலம் இந்திய அணி ஆட்டத்தை மீண்டும் தன்வசப்படுத்தியது.
மழையால் தடைபட்ட ஆட்டம்
இதன் பின்னர் ஜார்ஜ் டாக்ரெல் களமிறங்கி ஒரு பவுண்டரி அடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அயர்லாந்து அணி 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த போது, பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் நடுவர்கள் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர். மைதானம் மூடப்பட்டுள்ள நிலையில், ஹாரி டெக்டர் 39 ரன்களுடனும், ஜார்ஜ் டாக்ரெல் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், பிரின்ஸ் யாதவ், சிறப்பாக பந்துவீடிச அயர்லாந்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. பிரின்ஸ் யாதவ் அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications

