IND vs IRE: சரிந்த இந்திய அணி டாப் ஆர்டர்.. சாம்சன் மீண்டும் சொதப்பல்.. இந்தியா திணறல்
பெல்ஃபாஸ்ட்: இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணிக்கு அயர்லாந்து அணி 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரர்களாக சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் தனது 100-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஹாரி டெக்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார். இவருக்கு வலுவான ஒத்துழைப்பு அளித்த பென் காலிட்ஸ், டெக்டருடன் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஒரு கட்டத்தில் அயர்லாந்து அணி 11-வது ஓவரில் 22 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய போதிலும், இந்திய பந்துவீச்சாளர்கள் ரன் வேகத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தினர்.

இந்திய அணி தரப்பில் தனது அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக பந்துவீசிய பிரின்ஸ் யாதவ், 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி ஓவர்களில் அயர்லாந்து வீரர்களை கட்டுப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள், இறுதி 2 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.
இந்திய அணியின் அதிர்ச்சி தொடக்கம்: சரிந்த டாப் ஆர்டர்
155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே கடும் அதிர்ச்சியாக அமைந்தது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் மூந்த்ரா வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ரன் ஏதுமின்றி (கோல்டன் டக்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவும் அதே ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சில பவுண்டரிகளை அடித்து ரன் சேர்க்க முயன்றனர். மேத்யூ ஹம்ப்ரிஸ் வீசிய ஓவரில் பவுண்டரிகள் விளாசி ரன் வேகத்தை உயர்த்தினர். ஆனால், மீண்டும் பந்துவீச வந்த ஜெய் மூந்த்ரா, ஸ்ரேயாஸ் ஐயரை (5 ரன்கள்) போல்டாக்கி அதிர்ச்சியளித்தார். இதனால் இந்திய அணி 2.4 ஓவர்கள் முடிவில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஜெய் மூந்த்ரா வெறும் 1.4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். வாய்ப்புக்காக வைபவ் சூர்யவன்ஷி காத்திருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வருவது,அவருடைய இடத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால், அடுத்த இங்கிலாந்து தொடரில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

