Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs IRE: தமிழக வீரர் இடத்தில் வைபவ் சூர்யவன்ஷி.. இந்திய பிளேயிங் லெவனில் மாற்றத்துக்கு வாய்ப்பு

பெல்ஃபாஸ்ட்: இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெல்ஃபாஸ்ட்டில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழப்பதைத் தவிர்க்க இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டிக்கான இந்திய ஆடும் லெவனில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, 15 வயதே ஆன பீகாரைச் சேர்ந்த இடதுகை அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி இந்த போட்டியில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
அவர் அணியில் சேர்க்கப்பட்டால், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக களம் இறக்கப்படலாம்.

IND vs IRE 2nd T20 Will Vaibhav Suryavanshi Debut Indian Team Playing XI Changes Expected

முதல் போட்டியில் சுந்தர் வீசிய ஒரு ஓவரில் 19 ரன்கள் கொடுத்ததுடன், பேட்டிங்கிலும் 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டால், அவர் அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவார். சஞ்சு சாம்சன் 3-வது இடத்திலும், இஷான் கிஷன் 4-வது இடத்திலும் விளையாடக் கூடும். ஆனால், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் கீழ் பேட்டிங் வரிசையில் களமிறங்குவார்கள். அது பேட்டிங் வரிசையில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

அடுத்து பந்துவீச்சிலும் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. முதல் போட்டியில் விக்கெட் ஏதுமின்றி 4 ஓவர்களில் 57 ரன்கள் வாரி வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக, ஆல்-ரவுண்டர் பிரின்ஸ் யாதவ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பிரின்ஸ் யாதவ் அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் புதிய உலக சாதனை.. 401 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் ஜோடி மிரட்டல்

149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் புதிய உலக சாதனை.. 401 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் ஜோடி மிரட்டல்

மும்பை ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்: அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.

Story first published: Sunday, June 28, 2026, 7:36 [IST]
Other articles published on Jun 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+