Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் ஆன ஹர்திக் பாண்ட்யா.. அறிமுகமாகும் அதிரடி வீரர்.. அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

கடந்த ஜூன் 9ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஜூன் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.

அயர்லாந்து தொடர்

அயர்லாந்து தொடர்

இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. இந்த போட்டிகள் வரும் ஜுன் 26ம் தேதி மற்றும் ஜூன் 28ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டனாகும் பாண்ட்யா

கேப்டனாகும் பாண்ட்யா

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதால், அயர்லாந்து தொடருக்கு புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்படவுள்ளார். அவரின் தலைமையில் 17 பேர் கொண்ட அணி உருவாக்கப்பட்டுள்ளது.

திரிபாதிக்கு வாய்ப்பு

திரிபாதிக்கு வாய்ப்பு

தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்ற பல வீரர்களும் இதில் அடங்கியுள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த சூர்யகுமார் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல ஐபிஎல் தொடரில் கலக்கிய ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய படை

இந்திய படை

ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

Story first published: Wednesday, June 15, 2022, 21:35 [IST]
Other articles published on Jun 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+