Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND Vs IRE: திரில்லர்! 1 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி.. 16 தொடர்களை வென்ற இந்திய பயணம் கதம்

பெல்ஃபாஸ்ட்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் (Whitewash) பெற்று சாதனை படைத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணியை அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. தற்போது, அடுத்தடுத்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற சாம்பியனான இந்திய அணியை, தனது முழுமையான பலம் இல்லாத நிலையிலும் வீழ்த்தி அயர்லாந்து இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பெல்பாஸ்ட்டில் உள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் தனது 100-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஹாரி டெக்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார்.

Ireland cricket team celebrating historic series victory

இவருக்கு வலுவான ஒத்துழைப்பு அளித்த பென் காலிட்ஸ், டெக்டருடன் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஒரு கட்டத்தில் அயர்லாந்து அணி 11-வது ஓவரில் 22 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய போதிலும், இந்திய பந்துவீச்சாளர்கள் ரன் வேகத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தினர்.

ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றதை அடுத்து, ஓவர்கள் ஏதும் குறைக்கப்படாமல் போட்டி மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியின் விக்கெட் சரிவு

155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே கடும் அதிர்ச்சியாக அமைந்தது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் மூந்த்ரா வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ரன் ஏதுமின்றி (கோல்டன் டக்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவும் அதே ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இலக்கை நோக்கிப் பயணித்த இந்திய அணிக்கு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. குறிப்பாக, 11.3 ஓவர்களில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த அக்சர் படேல், மேட் ஹோலார்ட் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கரின் சிறப்பான கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார்.

திலக் வர்மா, ஷிவம் துபே போராட்டம்

மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக களமிறங்கிய ஷிவம் துபே 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அயர்லாந்து பந்துவீச்சாளர்களான மேட் ஹோலார்ட், ஹாரி டெக்டர் மற்றும் லியாம் மெக்கார்த்தி ஆகியோர் இந்திய பேட்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட ஹேரி டேக்டர் தனது சுழற் பந்துவீச்சை வீசினார். அதனை ஆர்ஸ்தீப் சிங்கும், ஹர்ஷித் ராணாவும் எதிர்கொண்டார். கடைசி ஓவர் என்பதால் கடும் நெருக்கடி ஏற்பட அவர் ஓயிடு பந்துகளையும் உயரம் அதிகமாகக் கொண்ட நோ பால்களையும் வீசினார். இதனால் இந்திய அணிக்கு பிரீ ஹிட் மற்றும் கூடுதல் ரன்கள் கிடைத்தது.

இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி ஒரு பௌண்டரியை விளாசியது. கடைசியாக நான்கு பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மீண்டும் ஒரு ஓயிடு பந்தை ஹேரி டேக்டர் வீசினார். இதனை அடுத்து கடைசி இரண்டு பந்தில் எட்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஹெரி டேக்டர் வீசிய கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை ஹர்ஷித்ராணா சிக்சர் அடிக்க முற்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.

IND vs IRE: வெட்கக்கேடான சாதனை படைத்த சாம்சன், அபிஷேக்.. ஜோடியாக போட்ட கோழி முட்டை

IND vs IRE: வெட்கக்கேடான சாதனை படைத்த சாம்சன், அபிஷேக்.. ஜோடியாக போட்ட கோழி முட்டை

கடைசி ஓவரில் பிரின்ஸ் சிக்ஸர் அடித்தும் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 16 தொடர்களை வெற்றியை ருசித்த நிலையில் அந்த பயணம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

Story first published: Sunday, June 28, 2026, 22:48 [IST]
Other articles published on Jun 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+