Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs IRE: வாஷிங்டன் சுந்தருக்கு ஓவர் கொடுப்பதா? ஸ்ரேயாஸ் ஐயரை கடுமையாக விமர்சித்த சேவாக்

பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தவறை சுட்டிக்காட்டி முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடும் விமர்சனத்தை வைத்து இருக்கிறார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு எதிராக, 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இந்திய அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன் 5, இஷான் கிஷன் 1 மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் முதல் 5 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அயர்லாந்து அணியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய் முன்ட்ரா, சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து லியாம் மெக்கார்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஓரளவு போராடிய போதிலும் இந்திய அணியால் வெற்றியை எட்ட முடியவில்லை.

IND vs IRE Shreyas Iyer s decision to give over to Washington Sundar questioned by Virender Sehwag

இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி குறித்து முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவுகளை அவர் சாடினார்.குறிப்பாக அதுவரை ஒரு ஓவர் கூட வீசாத வாஷிங்டன் சுந்தருக்கு 16வது ஓவரில் பந்து வீச வாய்ப்பு கொடுத்தது பற்றி விமர்சித்து இருக்கிறார்.

இது குறித்து சேவாக் கூறுகையில், "ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி எனக்கு சிறிதும் திருப்தி அளிக்கவில்லை. அயர்லாந்து அணியின் இரு பேட்ஸ்மேன்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருந்த போது, 15வது ஓவரில் (16வது ஓவர்) வாஷிங்டன் சுந்தரை பந்துவீச அழைத்தது முற்றிலும் தவறான முடிவு. எதிர்பார்த்தபடியே அந்த ஓவரில் எதிரணி அதிக ரன்களைக் குவித்தது. மேலும், இந்திய பேட்டிங் வரிசை குறித்தும் கவலை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அணியில் பொறுப்புடன் விளையாடி போட்டியை முடித்துக் கொடுக்கும் பினிஷர்கள் யாரும் இல்லை. கிரிக்கெட் என்பது சிக்ஸர்கள் அடிப்பது மட்டுமல்ல, சூழலுக்கு ஏற்ப விளையாடுவதே முக்கியம்" என்று கூறினார்.

IND vs IRE: கேப்டனாக முதல் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் படுமோசமான சாதனை.. கோலி, கில் வரிசையில் இடம்

IND vs IRE: கேப்டனாக முதல் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் படுமோசமான சாதனை.. கோலி, கில் வரிசையில் இடம்

மறுபுறம், இந்த தோல்வியால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.

IND vs IRE: “வைபவ் சூர்யவன்ஷி.. உனக்கு இதுதான் முதல் வேலை”.. கம்பீர் கொடுத்த 'ஸ்பெஷல்' டியூட்டி!

IND vs IRE: “வைபவ் சூர்யவன்ஷி.. உனக்கு இதுதான் முதல் வேலை”.. கம்பீர் கொடுத்த 'ஸ்பெஷல்' டியூட்டி!
Story first published: Saturday, June 27, 2026, 8:09 [IST]
Other articles published on Jun 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+