நியூயார்க் : டி20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் இன்று விளையாடி வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் குல்தீப் யாதவ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி t20 கோப்பையை வெல்லவே இல்லை. மேலும் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இது t20 தொடராக இருக்கலாம்.

இதனால் இந்தத் தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்ற வேண்டிய உத்வேகத்தில் களமிறங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தான் கேப்டன் பொதுவாக போட்டி தொடங்கும் முன் கேப்டன் ரோகித் தான் எப்படி விளையாட வேண்டும். யுக்திகளை எப்படி வகுக்க வேண்டும் என்று வீரர்களிடம் பேசுவார். ஆனால் இன்றைய ஆட்டத்திற்கு முன்பு ரோகித் சர்மா அந்த பொறுப்பை விராட் கோலி இடம் கொடுத்து விட்டார்.
இதனால் இந்த கௌரவத்தை எடுத்துக் கொண்ட விராட் கோலி வீரர்களிடம் உணர்ச்சி பொங்க பேசினார். அது மட்டுமல்லாமல் இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் இல்லாததால் விராட் கோலி தான் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க போகிறார். இது t20 இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோருக்கு இடையே நல்ல ஒரு புரிந்து உணர்வு இருக்கிறதையே இது காட்டுகிறது.
இதனால் தான் ரோகித் சர்மா எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் விராட் கோலிக்கு இந்த பொறுப்பை வழங்கி இருக்கிறார் என தெரிகிறது. அது மட்டுமல்லாமல் விராட் கோலியும் எனக்கு ஏன் இந்த வேலை என்று நினைக்காமல் இம்முறை எப்படியாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார். இந்திய வீரர்களின் செயல்பாடுகளில் வழக்கத்திற்கு மீரிய உற்சாகம் தெரிகிறது. இதனால் இந்தியா இம்முறை கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.