Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs அயர்லாந்து முதல் டி20.. எந்த சேனல், ஓடிடி-யில் பார்ப்பது? இந்திய நேரம் என்ன? முழு விவரம்!

மும்பை: இந்தியா - அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஓடிடி ஒளிபரப்பு மற்றும் போட்டி தொடங்கும் நேரம் உள்ளிட்டவை பற்றி பார்க்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவால் 17 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தொடரை இழந்து மோசமான சாதனையை படைத்தது.

IND vs IRE: When and Where to Watch the Live Streaming of India vs Ireland T20 Series

இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. நாளை தொடங்கவுள்ள முதல் டி20 போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர். ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 23 வரை 3 போட்டிகளுக் நடக்கவுள்ளன. இந்த தொடரில் 11 மாதங்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ள பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

இந்த டி20 தொடருக்கான முதல் 2 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இந்த நிலையில் இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அனைத்தும் டப்ளினில் நடக்கவுள்ளதால், இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளன. கிட்டத்தட்ட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு செயய்ப்படும் நேரத்திலேயே போட்டிகள் நடக்கவுள்ளது.

அதேபோல் இந்தியா - அயர்லாந்து இடையிலான டி20 தொடர் ஒளிபரப்பு உரிமை ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் நேரடி ஒளிபரப்பு ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி தொடர்புடைய சேனல்களில் பார்க்க முடியும். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரை போல் அயர்லாந்து டி20 தொடரும் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

அதேபோல் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவரும் ஜியோ சினிமாஸில் இலவசமாக இந்தியா - அயர்லாந்து டி20 தொடரை பார்க்க முடியும். மேலும் ஐபிஎல் தொடரை போல் மாலை இரவு நேரத்தில் ஆட்டம் நடக்கவுள்ளதால், இந்த போட்டிகளை அதிக ரசிகர்கள் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, August 17, 2023, 15:09 [IST]
Other articles published on Aug 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+