Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி இல்லாதது ஏமாற்றம்..இந்திய வீரர்களுடன் விளையாடியது கனவு போல் இருக்கு-ஜப்பான் கேப்டன்

சனோ: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை முதல் முறையாக எதிடாகொண்ட ஜப்பான் அணி வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பான் கிரிக்கெட் அணி தோற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் மற்றும் அணியின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து ஜப்பான் அணியின் கேப்டன் தனது நெகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் பகிர்ந்துள்ளார்.

உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றிற்கு எதிராக கடைசி பந்து வரை போராடிப் பெற்ற இத்தோல்வி, ஜப்பான் கிரிக்கெட்டின் புதிய சகாப்தத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உலகின் முன்னணி அணிக்கு எதிராக கடைசி பந்து வரை போட்டியைக் கொண்டு சென்றது மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்ட அவர், "ஜப்பான் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்து ஸ்ரேயாஸ் போன்ற முன்னணி வீரர்கள் பாராட்டிப் பேசியது இன்னும் ஒரு கனவு போல உள்ளது.

Japan

எங்கள் அணியினர் மற்றும் ஒட்டுமொத்த ஜப்பான் கிரிக்கெட் சமூகம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார். மேலும், இப்போட்டியை சாத்தியமாக்கிய பிசிசிஐ ஸ்பான்சர் சுசூகி மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மைதானத்தை தயார் செய்ய இரவு முழுவதும் உழைத்த தன்னார்வலர்கள் மற்றும் ஜப்பான் மகளிர் கிரிக்கெட் அணியினரின் பங்களிப்பையும் அவர் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

டி20 கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை.. உலக அளவில் ஒரே அணி என பெருமை.. ஆஸ்திரேலியா கூட கிடையாது

டி20 கிரிக்கெட்டில் இந்தியா புதிய சாதனை.. உலக அளவில் ஒரே அணி என பெருமை.. ஆஸ்திரேலியா கூட கிடையாது

போட்டியின் நடுப்பகுதியில் அணியின் உத்தி குறித்துப் பேசிய அவர், "அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது ஒரு கடினமான சவால் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். இருப்பினும், எதையும் சாதிக்க முடியும் என்ற பாசிட்டிவ் எண்ணத்துடன் களம் இறங்கினோம்.

ஓவருக்கு சராசரியாக 6.5 ரன்கள் தேவைப்பட்ட போது, சில பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இருந்தது. தோல்வியடைந்தாலும், கடைசி பந்து வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றது திருப்தி அளிக்கிறது" என்று கூறினார்.

ஜப்பான் அணியின் இளம் வீரர்களின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், அணியின் 17 வயது இளம் திறமையான சார்லியின் பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டினார். "சார்லி கடந்த சில வருடங்களாகவே எங்களோடு பயணித்து வருகிறார். அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். அதே வேளையில், இந்தியாவின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி இன்றைய போட்டியில் விளையாடாதது சற்று ஏமாற்றம் அளித்தது" என்று தெரிவித்தார். மேலும், உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இடோ-டேவிஸ் மற்றும் தகாஹாஷி ஆகியோரையும் அவர் பாராட்டினார்.

ஆடுகளம் மோசமாக இருந்தது.. நிலைமையை அறிந்து விளையாடினேன்.. ஜப்பான் ஆட்டம் குறித்து ஸ்ரேயாஸ் கருத்து

Also Read

ஆடுகளம் மோசமாக இருந்தது.. நிலைமையை அறிந்து விளையாடினேன்.. ஜப்பான் ஆட்டம் குறித்து ஸ்ரேயாஸ் கருத்து

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கம் வெல்வது குறித்துப் பேசிய அவர், "ஒரு முழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட அணிக்கு எதிராக நாங்கள் விளையாடிய முதல் போட்டி இதுவாகும். இனி எங்களுக்கு 36 மணிநேர ஓய்வு மட்டுமே உள்ளது. நாஞ்சிங் நகருக்குச் சென்று அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும். அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. வரவிருக்கும் போட்டிகளில் எங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி கடுமையாகப் போராடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Story first published: Tuesday, September 22, 2026, 15:13 [IST]
Other articles published on Sep 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+