ஆடுகளம் மோசமாக இருந்தது.. நிலைமையை அறிந்து விளையாடினேன்.. ஜப்பான் ஆட்டம் குறித்து ஸ்ரேயாஸ் கருத்து
சானோ: ஜப்பானுக்கு எதிரான முதல் டி20 போட்டி 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஜப்பான் அணி 30 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.இதன் மூலம் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் இந்திய அணி வென்றது.
இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆடுகளம் நிச்சயமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக பந்து நன்கு திரும்பக்கூடியதாக இருந்தது. நேர்மையாகச் சொல்வதானால், இதில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. தொடர்ந்து ரன்களை குவித்து வரும் தொடக்க வீரர்களால்கூட சுழற்பந்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல் தடுமாறுவதை நாம் கண்டோம்.

நான் களமிறங்கியதும், முடிந்தவரை சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் எடுத்து ஸ்டிரைக்கை மாற்றுவது முக்கியம் என்று முடிவு செய்தேன். என்னுடன் விளையாடிய மற்ற பேட்ஸ்மேன்களுடனும் நான் பேசினேன், ஆனால் அவர்களுக்கும் நிலைமை கடினமாகவே இருந்தது.
இருப்பினும், பந்தின் தன்மைக்கேற்ப விளையாடி, அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். பந்து சுழன்று, ஆடுகளத்தில் பட்டு பந்து மெதுவாக வரும்போது, பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி, கிரீஸின் பின் பகுதிக்குச் சென்று சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ரன்களை எடுக்க முயற்சித்தேன். இந்த உத்தி எனக்கு மிகச் சிறப்பாக உதவியது.
ஐந்து ஓவர்கள் கொண்ட ஆட்டமாக இருந்தாலும், அது எந்தப் பக்கமும் திரும்பலாம் என்று நான் எப்போதும் கூறுவதுண்டு. நீங்கள் எவ்வளவு சிறந்த அணியாக இருந்தாலும், எதிரணியும் சமமான போட்டித்தன்மையுடன் விளையாடும் என்பதால் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இன்று ஜப்பான் அணி காட்டிய அர்ப்பணிப்பும் அணுகுமுறையும் மிகச்சிறப்பானது.
அவர்களுக்கு எனது பாராட்டுகள். அவர்களின் இந்த அணுகுமுறை அசத்தலாக இருந்தது. அவர்கள் தற்போது சரியான பாதையில் பயணிக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிரான அவர்களின் அடுத்தடுத்த போட்டிகள் அவர்களுக்கு மிகச் சிறந்ததாக அமையும். எங்களை பொறுத்தவரை, ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த பயிற்சி வாய்ப்பாக அமைந்தது என்று ஸ்ரேயாஸ் கூறினார்.


Click it and Unblock the Notifications


