For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NAM: இன்னும் 4 விக்கெட் எடுத்தால் போதும்.. மாபெரும் உலகக்கோப்பை ரெக்கார்டு அருகே அர்ஷ்தீப்

டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா தனது இரண்டாவது லீக் போட்டியில் இன்று நமீபியா அணியை எதிர்கொள்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற அர்ஷ்தீப் சிங்கிற்கு இன்னும் 4 விக்கெட்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

அஸ்வின் முதலிடம்

டி20 உலகக்கோப்பைத் தொடர்களில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது முதலிடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட அஸ்வின், இந்தியாவுக்காக 24 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

IND vs NAM Arshdeep Singh Nears Historic Milestone Can He Break Ravichandran Ashwin s T20 World Cup Record

அர்ஷ்தீப் சிங் வேகம்

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அஸ்வினை விட மிகக் குறைவான போட்டிகளிலேயே இந்த இலக்கை நெருங்கியுள்ளார். இதுவரை 15 உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அர்ஷ்தீப், 29 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இன்று நடைபெறும் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றினால், அஸ்வினை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிப்பார். ஒருவேளை 3 விக்கெட்களை வீழ்த்தினால் அஸ்வின் சாதனையை சமன் செய்வார்.

அடுத்தடுத்த இடங்களில் யார்?

இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்தபடியாக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். அவர் 18 போட்டிகளில் 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்ததாக ஹர்திக் பாண்டியா 24 விக்கெட்களுடனும், ரவீந்திர ஜடேஜா 22 விக்கெட்களுடனும் உள்ளனர்.

உலக சாதனை

உலக அளவில் டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தன் வசம் வைத்துள்ளார். அவர் 43 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான அர்ஷ்தீப் சிங், மிகக் குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். 2022 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே 3 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பையில் மட்டும் 17 விக்கெட்களை வீழ்த்தி, ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப், இன்றைய டெல்லி போட்டியிலும் கலக்குவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Story first published: Thursday, February 12, 2026, 7:42 [IST]
Other articles published on Feb 12, 2026
English summary
IND vs NAM: Arshdeep Singh is just 4 wickets away from surpassing Ravichandran Ashwin to become India's leading wicket-taker in T20 World Cup history. Will he achieve this feat in today's match against Namibia?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+