IND vs NAM: 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி.. புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்தியது
டெல்லி: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் நமிபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமிபியா அணி கேப்டன் ஏராஸ்மஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன், இசான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

சஞ்சு சாம்சன் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என எட்டு பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் இசான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இதன் காரணமாக இந்திய அணி 6.5 ஓவர்லெலாம் 100 ரன்களை எட்டியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 21 பந்துகளில் 25 ரன்கள் சேர்க்க கேப்டன் சூரியகுமார் 13 பந்துகளின் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த சூழலில் நடுவரிசையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நான்கு சிக்சர், நான்கு பவுண்டரி என 28 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சிவம் துபே 16 பந்துகளில் 23 ரன்கள் சேர்க்க பின் வரிசையில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் பெரிய இலக்கை துரத்தும் போது டாப் வரிசை வீரர்கள் பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும். ஆனால் நமிபியா அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஒரு கட்டத்தில் 86 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆனால் அடுத்த ஆறு ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம் நமிபியா அணி 94 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. பின்வரிசையில் களம் இறங்கிய வீரர்களும் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதன் காரணமாக அந்த அணி 116 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 18 வது ஓவர் வீசும் போது தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாட்ரிக் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த வாய்ப்பை வீணடித்தார். இதன் மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications