Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NAM: இந்தியா - நமீபியா போட்டி.. டெல்லியில் ரன் மழை.. பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை அறிக்கை

டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா தனது இரண்டாவது லீக் போட்டியில் இன்று நமீபியா அணியை எதிர்கொள்கிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்யும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடி

மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில், ஆடுகளம் சற்று சவாலாக இருந்தது. இதனால் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறினர். 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடினார்.

IND vs NAM T20 World Cup 2026 Pitch Report Weather Forecast and Match Prediction for Delhi Clash

அமெரிக்க பந்துவீச்சாளர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்கிய சூர்யகுமார், 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி கட்டத்தில் அவரது அதிரடியால் இந்தியா 161 ரன்களை எட்டியது. பின்னர் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றும் அதே உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கும்.

நமீபியா நிலைமை என்ன?

மறுபுறம் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தலைமையிலான நமீபியா அணி, தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. டெல்லியில் நடைபெற்ற அந்தப் பகல் நேரப் போட்டியில் ஆடுகளம் மெதுவாக இருந்ததால், அந்த அணியால் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பந்துவீச்சிலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் தோல்வியடைந்தது. பலம் வாய்ந்த இந்திய அணியைச் சமாளிக்க அவர்கள் இன்று கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

பிட்ச் அறிக்கை

இந்தியா - நமீபியா போட்டி நடைபெற உள்ள டெல்லி அருண் ஜெட்லி மைதானம் பொதுவாகவே பேட்டிங்கிற்கு சாதகமானது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்ஸ்மேன்கள் எளிதாக சிக்ஸர்களை விளாச முடியும். இந்தப் போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதால் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.

வானிலை நிலவரம்

டெல்லியில் தற்போது குளிர்காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதால் வானிலை கிரிக்கெட் விளையாட மிகவும் ஏற்றதாக இருக்கும். மழைக்கு வாய்ப்பில்லை. போட்டி நடைபெறும் நேரத்தில் வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காற்றில் ஈரப்பதம் 65 சதவீதம் வரை இருக்கும்.

அணி விவரம்

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

நமீபியா: கெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் கிரீன், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், ரூபன் ட்ரம்பல்மேன், ஜேஜே ஸ்மித், ஜான் ஃப்ரைலின்க், லாரன் ஸ்டீன்காம்ப், மலான் குருகர், நிக்கோல் லாஃப்டி-ஈடன், ஜாக் பிராஸல், பென் ஷிகோங்கோ.

Story first published: Thursday, February 12, 2026, 6:41 [IST]
Other articles published on Feb 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+