Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் ஒரு குறை இருக்கு.. சூப்பர் 8 முன் அதை சரி செய்யனும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் நெதர்லாந்திற்கு எதிரான 17 ரன் வித்தியாச வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பாடு குறித்து, முன்னாள் சிஎஸ்கே வீரர் மோஹித் ஷர்மா கவலை தெரிவித்தார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி தோல்வியின்றி லீக் சுற்றை நிறைவு செய்தது.

பனிப்பொழிவு வருவதற்கு வாய்ப்புள்ள மைதானத்தில், 194 ரன்கள் என்ற கடினமான இலக்கைப் பாதுகாக்கும் முயற்சியில், இந்திய அணி புதிய பந்து வீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டனர். மிடில் ஓவர்களில் நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். 15 ஓவர்கள் முடிவில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான அணி 118 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்ட முடியாத நிலையில் இருந்தது.

இருப்பினும், கடைசி ஐந்து ஓவர்களில் இந்தியா 58 ரன்களை வாரி வழங்கியது. ஹர்திக் பாண்டியா, கடைசிக்கு முந்தைய ஓவரில் மட்டும் 18 ரன்களைக் கொடுத்தார். அதேசமயம், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தும் அவரைப் பயன்படுத்தவில்லை.

இது குறித்து பேசிய மோஹித் ஷர்மா,"சூப்பர் 8 சுற்றில் இந்தியா எந்த வீரர்களுடன் விளையாடும் என்பது இன்னும் சந்தேகமாக உள்ளது. அக்சர் பட்டேல் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் எட்டாவது இடத்தில் இருந்தால், கடைசி ஓவர்களை யார் வீசுவார்கள்? நெதர்லாந்து போன்ற ஒரு அணி டெத் ஓவர்களில் சவால் விடுக்கிறது என்றால், அடுத்து வரும் பெரிய அணிகளுடனான போட்டி மிகவும் கடினமாக இருக்கும். அர்ஷ்தீப் இருந்தால், அவர் பும்ராவுடன் பந்துவீச முடியும் என்பதால், டெத் ஓவர்களில் சிறிது நன்மை இருக்கும்," என்று கூறினார்.

சூப்பர் 8 பிரிவில், இந்திய அணி பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை அன்று அதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தியாவைப் போலவே, தென்னாப்பிரிக்க அணியும் தங்கள் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று தோல்வியின்றி வலம் வந்துள்ளது.

Story first published: Thursday, February 19, 2026, 16:27 [IST]
Other articles published on Feb 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+