Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NED: சூர்யகுமார் ஒரு தங்கமான வாய்ப்பை வீணடித்தார்.. பேசுகிறார்கள், ஆனால் செய்ய மாட்றாங்க-ஜாகீர் கான்

மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 லீக் சுற்றில் தோல்வியின்றி சூப்பர் 8க்கு இந்திய அணி முன்னேறியுள்ள நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர்கள் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், நெதர்லாந்துக்கு எதிரான இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஒரு முக்கிய வாய்ப்பைத் தவறவிட்டதாக கூறியுள்ளார். அகமதாபாத்தில் நடந்த அந்த ஆட்டத்தில், இந்தியா ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்ததால், பந்துவீச்சில் பல பரிசோதனைகளை மேற்கொண்டது.

பவர்பிளேயில் நெதர்லாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத் பந்துவீசியபோது, முதல் விக்கெட் வீழ்ந்த பின்னரும், சூர்யா 3வது இடத்தில் இறங்காமல், திலக் வர்மா விளையாடினார். இதனால், முதல் ஒன்பது ஓவர்களில் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் உட்பட மூன்று இடது கை பேட்ஸ்மேன்களை இந்தியா இழந்தது. தத் இருவரையும் வெளியேற்றினார்.

சூர்யகுமார் 3வது இடத்தில் இறங்காதது குறித்து பேசிய ஜாகீர், "இந்த ஆட்டத்தை இந்தியா பரிசோதனை நோக்கில் அணுகியது. ஆனால், சூர்யா தவறவிட்ட ஒரு வாய்ப்பு, அவர் 3வது இடத்தில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் வீசிக் கொண்டிருந்தார். முதல் விக்கெட்டும் விழுந்தது. இடது-வலது கூட்டணிக்குத் தேவையான சூழல் பற்றி அவர்கள் பேசுகிறார்கள், இன்று அதற்கான வாய்ப்பு இருந்தது. இது அவர் யோசிக்க வேண்டிய ஒன்று" என்றார்.

"அவர் ரன்களை குவித்து வருகிறார். தேவைப்பட்டால், நான் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய முடியும் என்ற செய்தியை இதன்மூலம் அனுப்பியிருக்க முடியும். மற்றபடி அவர் தனது மாற்றங்களில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். வருண் மற்றும் பும்ரா என்ற முக்கிய வீரர்களை அவர் நன்றாகப் பயன்படுத்துகிறார். அவர்களில் ஒருவருக்கு மோசமான நாள் அமைந்தால் அவருக்கு உண்மையான சவால் ஏற்படும். அப்போது அழுத்தத்தை உணர்வீர்கள், அப்படி நடந்தால் மாற்றங்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், சூர்யகுமார் 4வது இடத்தில் களம் இறங்கினாலும், 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இந்தியாவின் இன்னிங்ஸை நிலைநிறுத்தினார். பின்னர், சிவம் தூபேயின் அதிரடி ஆட்டத்தால் (31 பந்துகளில் 66 ரன்கள்) இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 193 ரன்கள் குவித்தது.

Story first published: Thursday, February 19, 2026, 15:03 [IST]
Other articles published on Feb 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+