2 தமிழ்நாட்டு வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி.. இரண்டு பேருமே ஸ்பின்னர்.. IND vs NEP T20
ஹாங்சோ : நேபாள அணிக்கு எதிராக தன் முதல் டி20 போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா களமிறங்கியது.
இந்திய அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேபாள அணியை காலிறுதியில் சந்தித்தது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இருப்பதால் ஐபிஎல் தொடரில் ஆடி டி20 அனுபவம் கொண்ட இளம் வீரர்களை தேர்வு செய்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
அந்த அணியில் இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் நமக்கு அதிகம் அறிமுகம் ஆன வாஷிங்டன் சுந்தர். ஆஃப் ஸ்பின்னரான அவர் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர். மேலும், பேட்டிங்கிலும் ரன் சேர்ப்பார் என்பதால் அணியில் இடம் பெற்றார்.
மற்றொரு தமிழக வீரர் சாய் கிஷோர். அவர் ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவம் கொண்டவர். அவருக்கு இதுவே முதல் சர்வதேச டி20 போட்டி. தன் அறிமுக போட்டியில் ஆடும் அவரும், ஸ்பின்னர் மற்றும் பேட்டிங் ஆல் - ரவுண்டர் என்ற அடையாளம் கொண்டே அணியில் இடம் பெற்றுள்ளார்.
சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக கலக்கிய ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள அணிக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி விவரம் : ருதுராஜ் கெய்க்வாட் (கேட்ச்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஷிவம் துபே, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி.கே), வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்


Click it and Unblock the Notifications