For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் இவர்தான்.. விராட் கோலி ரெக்கார்டை உடைத்த அபிஷேக் சர்மா

நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வானவேடிக்கை காட்டினார். சிக்ஸர் மழை பொழிந்த அவர், வெறும் 35 பந்துகளில் 84 ரன்களைக் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக வலம் வரும் அபிஷேக் சர்மா, தனது அசுரவேக ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் அபிஷேக் சர்மா எந்தப் பதற்றமும் இல்லாமல் விளையாடினார்.

IND vs NZ 1st T20I Abhishek Sharma Sets World Record with 5000 T20 Runs and Fastest Strike Rate

ஆரம்பம் முதலே பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டுவதிலேயே குறியாக இருந்தார். அவரது இன்னிங்ஸில் 8 இமாலய சிக்ஸர்கள் அடங்கும். வேகம், சுழல் எனப் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் விளாசினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 ரன்களில் அந்த வாய்ப்பைத் தவறவிட்டார்.

இந்தப் போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்தார் அபிஷேக் சர்மா. இந்த மைல்கல்லை எட்ட அவர் எடுத்துக்கொண்டது 165 இன்னிங்ஸ்கள் மட்டுமே. இதன் மூலம் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5000 ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். விராட் கோலியை (167 இன்னிங்ஸ்) பின்னுக்குத் தள்ளி இவர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

விரைவாக 5000 டி20 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியல்:

கேஎல் ராகுல் - 143 இன்னிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் - 145 இன்னிங்ஸ்
சுப்மன் கில் - 154 இன்னிங்ஸ்
அபிஷேக் சர்மா - 165 இன்னிங்ஸ்
விராட் கோலி - 167 இன்னிங்ஸ்

5000 ரன்களைக் கடந்த எத்தனையோ வீரர்கள் இருந்தாலும், அபிஷேக் சர்மா அதில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். 5000 ரன்களைக் கடந்த வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது இவர்தான். இவரது ஸ்ட்ரைக் ரேட் 172.54 ஆகும். உலகின் வேறு எந்த வீரரும் இவ்வளவு வேகத்தில் 5000 ரன்களை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் 22 பந்துகளில் அவர் அரைசதத்தை எட்டினார். சர்வதேச டி20 போட்டிகளில் 25 பந்துகளுக்குக் குறைவாக எதிர்கொண்டு, அதிக முறை அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதுவரை 8 முறை அவர் 25 பந்துகளுக்குள் அரைசதம் அடித்துள்ளார்.

இதன் மூலம் இங்கிலாந்து வீரர் பில் சால்ட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் (அனைவரும் 7 முறை) ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். பவர்-பிளே ஓவர்களில் சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான அபிஷேக் சர்மா, தனது சிக்ஸர்களில் 60 சதவீதத்தை முதல் 6 ஓவர்களுக்குள்ளேயே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 22, 2026, 7:47 [IST]
Other articles published on Jan 22, 2026
English summary
IND vs NZ 1st T20I: Abhishek Sharma Sets World Record with 5000 T20 Runs and Fastest Strike Rate
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+